பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு போட்டியாக எடுக்கப்பட்டிருந்த யாத்திசை படத்திற்கு தற்போது மக்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர். படம் மிக நன்றாக இருப்பதாகவும் இயக்குனருக்கு இது முழு முதல் படம் போல தெரியவில்லை என்றும் அவர்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர். சேர, சோழ, பாண்டிய மன்னர்களை பற்றி பல வகையான படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றது. தற்போது பாண்டியர்களுக்கும் அவர்களை எதிர்த்துப் போராடும் பழங்குடியின மக்கள் ஒருவருக்கும் இடையிலான கதையை மையமாகக் கொண்டு யாத்திசை என்கிற படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இயக்குனர் தரணி சந்திரசேகரன் என்கிற அறிமுக இயக்குனர் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படம் முழுவதும் முழு புது முகங்களை வைத்து மட்டுமே எடுக்கப்பட்டிருக்கிறது. சக்தி மித்ரன், சேயோன், ராஜலட்சுமி, செம்மலர் போன்ற பல புதிய முகங்களை வைத்து இந்த படத்தை வெற்றி படமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் தரணி சந்திரசேகரன். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பாண்டிய இளவரசனாக இருக்கும் ரணதீரன் என்பவரின் வாழ்க்கை வரலாறை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாகியுள்ளதாக தெரிகிறது. இந்த படத்திற்கு சக்கரவர்த்தி இசையமைப்பாளராகவும், அகிலேஷ் காத்தமுத்து மற்றும் யதி சாய் இருவரும் ஒளிப்பதிவாளர்களாக பணியாற்றியுள்ளனர். இந்தப் படத்தை வீனஸ் இன்ஃபோடைன்மென்ட் நிறுவனம் மற்றும் சிக்ஸ் ஸ்டார் என்டர்டைன்மென்ட் ஆகிய இரண்டு நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த பாண்டிய இளவரசன் ரணதீரபாண்டியனுக்கும் எயினர்கள் என்று அழைக்கப்படும் பழங்குடியின மக்களுக்கும் இடையே நடக்கும் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அரிகண்டம், நவகண்டம் போன்று தன்னைத்தானே பலி கொடுக்கும் முறை, கொற்றவைக்கு பலி கொடுக்கும் முறை, தேவரடியாரின் வாழ்க்கை முறை உள்ளிட்டவை குறித்து இந்த படம் விரிவாக பேசியிருக்கிறது. இந்த படத்தின் ட்ரைலரை விஜய் சேதுபதி, கௌதம் மேனன் ஆகிய பிரபலங்கள் வெளியிட்டிருந்தனர்.
ட்ரைலர் வெளியான சில நிமிடங்களில் 35 லட்சம் பார்வையாளர்களைப் பற்றி நல்ல வரவேற்பு பெற்றிருந்தது. இந்த நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வருகிற 28ஆம் தேதி வெளியாகும் நிலையில் ஒரு வாரத்திற்கு முன்பே இந்த படம் வெளியாகி இருக்கிறது. தற்போது இந்த படம் குறித்து கருத்து தெரிவித்த பொதுமக்கள் படம் மிக நன்றாக இருப்பதாகவும் சேர சோழ பாண்டியர்கள் மன்னர்கள் பற்றிய நாம் பலரும் தெரிந்திருந்த நிலையில் தற்போது இதுபோல ஒரு மன்னர்களும் இருந்திருக்கிறார்கள் என்று நமக்கு காட்டியதற்காக இயக்குனருக்கு நன்றி என்றும் படத்தை புகழ்ந்து தள்ளியுள்ளனர். நீங்களும் அவர்கள் கூறிய விமர்சனங்களை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: News Reels 24×7