15வது நிதி ஆணையத்தின் நிபந்தனை விதிமுறைகளை மாற்றி அமைக்கும் முன் மாநில முதலமைச்சர்களின் கருத்தை கேட்க வேண்டும். இல்லையெனில் கூட்டாட்சி முறைக்கு எதிரானதாக அமையும் என்று முன்னாள் இந்திய பிரதமரும், மூத்த பொருளாதார வல்லுநருமான மன்மோகன் இன்று (செப்.14) தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று “15 வது நிதி ஆணையத்தின் கூடுதல் விதிமுறைகள்:மாநிலங்ககளுக்கு ஏற்படும் தாக்கங்களும்” என்ற தலைப்பில் நடைபெற்ற தேசிய கருத்தரங்கம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன், “நிதி ஆணையத்தின் நிபந்தனை விதிமுறைகளில் ஏதேனும் மாற்றம் கொண்ட வர மத்திய அரசு விரும்பினால், அது நிதி ஆயோகின் முதலமைச்சர்கள் மாநாட்டில் ஆதரவு அளிக்க வேண்டும். இல்லையேல், மத்திய அரசு மாநிலங்களின் வளங்களை கொள்ளையடிப்பது போன்ற உணர்வு அனைவர்க்கும் எழுந்துவிடும்” என்றார்.
மேலும் பேசிய அவர், நம் நாட்டின் கூட்டுறவு கொள்கைக்கும், கூட்டாட்சி தன்மைக்கும் மத்திய அரசின் ஒருதலைப்பட்சமான செயல் தீங்கை விளைவிக்கும். நாடாளுமன்றத்தில் எடுக்கப்படும் முடிவுகள் என்னவாக இருந்தாலும், மாநில நிதி ஆணையங்கள் மீது தனது எதிர்ப்பை திணிக்காமல், அதற்கு உடன்பட வேண்டும். 9வது நிதி ஆணையத்தின் போது அரசியலமைப்பால் வழிநடத்தப்பட்டு, அதன்படி வரிகளில் கிடைத்த பங்கினை பகிர்ந்து கொள்ளப்படும் என்று அன்றே கூறியதாகவும், அதனை இன்று 15வது நிதி ஆணையம் ஏற்றுக்கொள்ளுமா எனத் தெரியவில்லை என்று கவலை தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், சுகாதாரம், கல்வி மற்றும் இன்னும் பிற முக்கிய துறைகள் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண அனைத்து மாநிலங்களோடும் ஒருமித்த கருத்தை உருவாக்க வேண்டும். நிதி ஆணையத்தில் கூடுதல் விதிமுறைகளை அரசாங்கம் கொண்டு வருவது மிகவும் வித்தியாசமானது. பெரும்பாலான மாநிலங்கள் ஏற்கனவே அவற்றின் தேவைக்கேற்ப ஆணைத்தியத்திடம் முறையீட்டுக்குள்ளது. அனால், இப்போது நீங்கள் ஆணையத்திற்கு மற்றொரு விதிமுறைகளை விதிக்கிறீர்கள், இது அதன் பணிகளை சிக்கலாக்கும். நாட்டில் செழிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்பும் கூட்டாட்சி அரசியல் மற்றும் கூட்டுறவு கூட்டாட்சிக்கு போன்றவைக்கு நிச்சயமாக நல்லதல்ல. இவ்வாறு அவர் தெரிவித்தார்.