
உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிபாவின் உயரத்தில் இரு சிறுகோள்கள் செப்டம்பர் 14 ஆம் தேதியான இன்று இரவு பூமியை கடந்து செல்லவிருக்கிறதாக தேசிய விமானவியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (நாசா) எச்சரித்துள்ளது.
இந்த இரண்டு பிரம்மாண்டமான சிறுகோள்கள் 2000 கியூ.டபிள்யூ.7 மற்றும் 2010 சி.ஓ.1 ஆகும். 2000 கியூ.டபிள்யூ.7 என்ற சிறுகோள் 290 முதல் 650 மீட்டர் வரை அகலத்தையும் கிட்டத்தட்ட 828 மீீீீட்டர் உயரத்தையும் கொண்டது. இது மணிக்கு 23,100 கி.மீ வேகத்தில் கடக்கவிருப்பதாக நாசாவின் பூமிக்கு அருகிலுள்ள பொருள் ஆய்வுகளுக்கான மையம் கூறுகின்றது.
இது பூமியை 3.3 மில்லியன் மைல்கள் அல்லது 5.3 மில்லியன் கிலோமீட்டர் பாதுகாப்பான தூரத்தில் கடந்து செல்லும் என்றும் நாசா கூறுகின்றது. பூமியைப் போலவே, இந்த சிறுகோள் 2000 கியூ.டபிள்யூ.7 சூரியனைச் சுற்றி வருகிறது, அது எப்போதாவது நமது கிரகத்துடன் பாதைகளை கடக்கிறது.
இதற்கு முன்பு இந்த சிறுகோள் 2000ஆம் ஆண்டில் செப்டம்பர் 1 தேதியன்று பூமியை கடந்துள்ளது.
ஊடக அறிவிப்பின் படி இவ்விரு சிறுகோள்களில் 2000 கியூ.டபிள்யூ.7 என்னும் சிறுகோள் தான் பூமியை முதலில் கடக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
இனி அக்டோபர் 19 ஆம் தேதி 2080 ஆம் ஆண்டிற்கு முன்பு இந்த சிறுகோள் பூமியைக் கடந்துச் செல்லும் வாய்ப்பில்லை என்று நம்பப்படுகிறது.