சவுதி அரேபியாவின் அரம்கோ எண்ணெய் ஆலைகள் மீது டிரோன் தாக்குதல்!

சவுதி அரேபியாவின் அரம்கோ எண்ணெய் ஆலைகள் மீது டிரோன் தாக்குதல்! 1

சவுதி அரேபியாவில் உள்ள இரண்டு அரம்கோ எண்ணெய் ஆலைகள் மீது இன்று அதிகாலை டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக சவுதி உள்துறை அமைச்சர் அப்துல்ஸீஸ் பின் சவுத் அல் சவுத் கூறியுள்ளார்.

கச்சா எண்ணெயை சுத்திகரிக்கும் இவ்விரண்டு அரம்கோ ஆலைகளும் கிழக்கு சவுதி அரேபியாவிலுள்ள அப்காய்க் மற்றும் குரைஸ் பகுதிகளில் உள்ளன. விடியர்காலை நான்கு மணிக்கு நடத்தப்பட்ட தாக்குதலால் வானத்தில் பெரும் புகை உயர்ந்தது.

விளம்பரம்

இத்தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.இரண்டு ஆலைகளில் ஏதேனும் உயிரிழப்புகள் ஏற்பட்டதா அல்லது செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதா என்றும் தெரிவிக்கப்படவில்லை. ஆலைகளுக்கு அருகில் செய்தியாளர்கள் அனுமதிக்கப்படாததால் சேதத்தின் முழு அளவு உடனடியாக அறிவிக்கப்படவில்லை.

ஆனால் இரண்டு ஆலைகளின் தீயை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

விளம்பரம்

கடந்த மாதம் அரம்கோ எண்ணெய் ஆலையில் ஏமன் போராளிகள் தாக்குதல் நடத்தினர். முன்பு ஹூதி போராளிகளும் சவுதி அரேபியா மீது தாக்குதல் நடத்தியது. தற்போது நடத்தப்பட்ட தாக்குதல்களை பயங்கரவாதிகள் நடத்தியிருக்கலாம் என்று சவுதி அரேபிய அரசு சந்தேகப்படுகிறது.

தொடர்புடையவை  அறிவியலின் படி தேர்ந்தெடுக்கப்பட்ட உலகின் மிக அழகான பெண்!!

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment