சுகன்யான் திட்டம் தான் எங்கள் முழு நோக்கம்! இஸ்ரோ தலைவர் சிவன்!!

நிலவின் தென்துருவ பகுதியில் ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ விண்வெளிக்கு அனுப்பிய சந்திரயான் – 2′ விண்கலம் ஜூலை 22-ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது . இதுவரை எந்த ஒரு நாடும் நிலவின் தென் துருவத்துக்கு விண்கலத்தை அனுப்பியதில்லை என்பதால், மற்ற நாடுகளுடைய கவனம் சந்திரயான் -2′ மீது விழுந்தது . பூமியின் சுற்றுவட்டப்பாதையிலிருந்து விலகி ஆகஸ்ட் 14 ஆம் தேதி நிலவை நோக்கிப் பயணமானது சந்திரயான் 2.

சுகன்யான் திட்டம் தான் எங்கள் முழு நோக்கம்! இஸ்ரோ தலைவர் சிவன்!! 1

சுமார் 3.84 லட்சம் கிலோமீட்டர் எந்தவித சிக்கலுமின்றி பயணித்து கொண்டிருந்த சந்திரயான் – 2′,இறுதிகட்டமாக ஆர்பிட்டரிலிருந்து விக்ரம் லேண்டர் தனியாக பிரிந்து நிலவின் தரைப்பகுதியை நோக்கிப் பயணமானது. கடைசி 2.1 கிலோமீட்டர், தூரத்தைக் கடப்பதற்கு முன் சிக்னலில் கோளாறு ஏற்பட்டது. விக்ரம் லேண்டரிலிருந்து வெளிவரும் பிரக்யான் ரோவர்’ நிலவில் 14 நாள்கள் ஆய்வு செய்வதாக இருந்தது. விக்ரம் லேண்டரை தொடர்புகொள்ள இஸ்ரோ விஞ்ஞானிகளும், அமெரிக்காவின் நாசாவும் எவ்வளவோ முயற்சித்தும் சிக்னல் மீட்க முடியவில்லை. அந்த முயற்சி பலனளிக்கவில்லை. விக்ரம் லேண்டரின் ஆயுள்காலம் நேற்றுடன் முடிவடைந்தது.

விளம்பரம்
தொடர்புடையவை  16 வயது சிறுவன் பலத்கார வழக்கில் கைது! -டிஷா சட்டத்தின் கீழ் முதல் வழக்கு பதிவு!!

இந்நிலையில் , புவனேஷ்வரில் இஸ்ரோ தலைவர் சிவன் செய்தியாளர்களைச் சந்திப்பில் “விக்ரம் லேண்டருக்கு உண்மையில் என்ன நிகழ்ந்தது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இதுதான், இப்போது எங்கள் முதல் கட்ட முயற்சியாக உள்ளது . அறிவியல் ஆய்வில் முழுமையான மனநிறைவு அடையும்வரை ஆர்பிட்டர் தொடர்ந்து இயங்கும். 8 கருவிகள் ஆர்பிட்டரில் பொருத்தப்பட்டுள்ளது . ஒவ்வொரு கருவியும் எந்த நோக்கத்திற்காக வடிவமைக்கப்பட்டதோ அதற்கான பணிகளைச் சிறப்பாக செய்துவருகின்றன.

அறிவியல் ரீதியிலாக பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளதால் ஆர்பிட்டர் வரும் ஏழு ஆண்டுகளுக்கு இயங்குமாறு திட்டமிடப்பட்டுள்ளது. விக்ரம் லேண்டரிலிருந்து ஏன் தகவல்களைப் பெற முடியவில்லை என்பதை ஆய்வு செய்துவருகிறோம். ககன்யான் திட்டத்தில் தற்போது இஸ்ரோ முழு கவனம் செலுத்திவருகிறது. அடுத்த ஆண்டுக்குள் ஆளில்லா விண்கலத்தை நிலவுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளோம். 2021-ம் ஆண்டு இந்திய ராக்கெட்டின் மூலம் மனிதன் நிலவுக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளோம்” என்று கூறியுள்ளார்.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment