ஜெயம் ரவியின் 25 வது படத்துக்கு இதுதான் டைட்டிலா..!!

ஜெயம் ரவியின் 25 வது படத்துக்கு இதுதான் டைட்டிலா..!! 1

ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் வெளி வந்த கோமாளி படத்திற்கு ரசிகர்கள் இடத்தில் மாபெரும் வரவேற்பு இருந்தது. இதனையடுத்து படக்குழு கேக் வெட்டி கொண்டாடினர்.அதைத் தொடர்ந்து ஜெயம் ரவியின் 25வது படத்தினை அவரது அத்தை தயாரித்து வருகிறார். லக்ஷ்மன் இயக்கி வரும் இந்த படத்தில் ஹீரோயினாக நித்தி அகர்வால் நடித்து வருகிறார். ரோமியோ ஜூலியட், போகன் ஆகிய படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக லக்‌ஷ்மண்- ஜெயம் ரவி கூட்டணி உருவாகி உள்ளது.

இதில் ஜெயம் ரவிக்கு, இசையமைப்பாளர் டி. இமான் இசையமைக்கிறார். இந்த நிலையில் இன்னும் அதிகாரப்பூர்வமாக படத்தின் பெயரை அறிவிக்கவில்லை என தெரிகிறது இருந்தாலும் , இப்படத்திற்கு `சர்வாதிகாரி’ என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விளம்பரம்

படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டே இருக்கிறது.
இந்த படத்தை தொடர்ந்து அஹமத் இயக்கத்தில் ஜெயம் ரவி தனது 26-வது படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு `ஜன கண மன’ என பெயர் வைத்திருப்பதாகக் கூறப்படுகின்றது. இது ஜெயம் ரவி ரசிகர்களுக்கு ஒரு சிறப்பான செய்தியாகவே அமையும். ஏற்கனவே அவர்கள் கோமாளி படத்தை கொண்டாடி வரும் நிலையில் தற்போது அடுத்து படத்தை கொண்டாடும் மன போக்கில் உள்ளனர், எது எப்படியிருந்தாலும் பட வெற்றியை தீர்மானிப்பது படத்தின் கதை மற்றும் போக்கில் தான் உள்ளது.

தொடர்புடையவை  பார்த்து வாம்மா Jo..! மனைவி Jyothika உடன் உறவினர் திருமணத்திற்கு வந்த நடிகர் Suriya..!

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment