“பாஜக கட்சி தோற்கடிக்க முடியாததல்ல. எதிர்கட்சிகள் இணைந்தால் முடியும்.” – பா.சிதம்பரம்.

"பாஜக கட்சி தோற்கடிக்க முடியாததல்ல. எதிர்கட்சிகள் இணைந்தால் முடியும்." - பா.சிதம்பரம். 1

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் தற்போது ஜே.எம்.எம் – காங்கிரஸ் கூட்டணி முன்னிலையில் இருப்பதால் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பா.சிதம்பரம் அவர்கள் இன்று பாஜக ஒன்றும் தோற்கடிக்க முடியாத கட்சியில்லை. எதிர்கட்சிகள் அனைவரும் ஒன்று சேர்ந்தால் வென்றுவிடலாம் என்று கூறியுள்ளார்.

மேலும் இன்று சென்னையில் குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிராக தி.மு.க நிகழ்த்திய பேரணியில் கலந்து கொண்ட பா.சிதம்பரம் அவர்கள் ஜார்க்கண்ட் தேர்தல் முடிவுகள் மகிழ்ச்சியை அளிப்பதாக கூறியுள்ளார். மேலும் அவர் பேரணியில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். அவர்

விளம்பரம்

“ஜார்க்கண்டில் நடைபெற்ற தேர்தலின் முடிவுகள் மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் ஜார்க்கண்ட் மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம். பாஜக தோற்கடிக்க முடியாதது அல்ல. அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து நாடு எதிர்கொள்ளும் ஆபத்துக்களைப் புரிந்துகொண்டு ஒன்றிணைந்தால்; நிச்சயமாக பாஜகவை தோற்கடிக்க முடியும், எதிர்கால தேர்தல்களிலும் பாஜக தோற்கடிக்கப்படும்.”

என்று தமிழ்நாடு காங்கிரஸ் குழு தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்துள்ளார்.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment