பிக் பாஸ் வின்னர் டைட்டில் எல்லாம் செல்லாது! முகென் ராவுக்கு இனிமேல் தான் சோதனையே!!

பிக் பாஸ் வின்னர் டைட்டில் எல்லாம் செல்லாது! முகென் ராவுக்கு இனிமேல் தான் சோதனையே!! 1

பிக் பாஸ் தமிழ் வரலாற்றில் இருந்த கோல்டன் டிக்கெட் வென்றவர்கள் டைட்டிலை வெல்ல மாட்டார் என்கிற நம்பிக்கையை மாற்றியவர் முகென் ராவ் டைட்டிலை வென்று புது வரலாறு படைத்துள்ளார் முகென். ஆனால் பிக் பாஸ் டைட்டிலையே வென்றாலும் திரையுலகில் நுழையும் வாய்ப்பு வந்துவிட முடியாது என்கிற நம்பிக்கை உள்ளது. இது தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஏன் இந்தி பிக் பாஸ் டைட்டிலை வென்றவர்களுக்கு கூட பொருந்தும்.

தமிழில் டைட்டிலை வென்ற ஆரவ் மற்றும் ரித்விகா ஆகியோரும் கோலிவுட்டில் நுழைய இன்னும் போராடிக் கொண்டு தான் உள்ளார்கள். கோலிவுட்டில் வளர்ச்சி பெற பிக் பாஸ் டைட்டில் சுத்தமாக உதவாது என்கிற நம்பிக்கையை மாற்றி முகென் ராவ் பெரிய ஆளாக வருவாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது.தமிழ் படங்களில் கவனம் செலுத்த வசதியாக மலேசியாவில் இருந்து சென்னைக்கு ஜாகையை மாற்ற முடிவு செய்துள்ளாராம் முகென். மேலும் தொடர்ந்து இசை வீடியோக்களை வெளியிடவும் திட்டமிட்டுள்ளார் அவர். முகென் ராவின் குரலுக்கு தமிழகத்தில் ஏகப்பட்ட ரசிகைகள் உருவாகி உள்ளனர்.

விளம்பரம்
தொடர்புடையவை  சுந்தர் சியின் வெறித்தனமான நடிப்பில் மாஸாக வெளியானது தலைநகரம் 2 டீசர்.! | Thalainagaram 2 Teaser

ஏற்கனவே கல்லூரி பெண்கள் பலரும் முகென் ராவின் வீடியோக்களை வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸாக வைத்து என்ன ஒரு குரல் என்று பெருமைபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.பிக் பாஸ் டைட்டிலை வென்றாலும் கோலிவுட்டில் ஜெயித்துக் காண்பிக்க முடியும் என்கிற பெரிய சோதனை முகென் ராவ் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. திறமைசாலியான அவர் இந்த சோதனையை சாதனையாக மாற்றுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

விளம்பரம்

Leave a Comment