பிரபுதேவாவின் படத்தில் நயன்தாராவா!!

பிரபுதேவாவின் படத்தில் நயன்தாராவா!! 1

கருப்பு ராஜா வெள்ளை ரோஜா என்ற படம் சில வருடங்களுக்கு முன் படவேலைகளை தொடங்கி முடங்கிப்போனது. இந்த படத்தை ஐசரிகணேஷ் தயாரிக்க பிரபுதேவா இயக்கினார். படப்பிடிப்பை ஊரடங்கு முடிந்ததும் மீண்டும் தொடங்குவது குறித்து பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கார்த்தி, விஷால், சாயிஷா ஆகியோர் இந்த படத்தில் நடிப்பதாக முடிவு செய்து அதற்கான பணிகள் தொடங்கியது. நடிகர் சங்கத்திற்கு நிதி திரட்டும் முயற்சியில் இந்த படத்தை எடுப்பதாகவும் அறிவித்திருந்தனர். படப்பிடிப்பு தொடங்கி சில நாட்களிலேயே ஒரு சில பிரச்சினைகளால் நிறுத்தப்பட்டது.

விளம்பரம்

இதனையடுத்து இந்த ஆண்டு படப்பிடிப்பை மீண்டும் தொடங்குவது குறித்து படக்குழுவினருடன் பிரபுதேவா பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். படத்தின் கதையில் சில மாற்றங்களைச் செய்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த படத்தில் நயன்தாராவை கதாநாயகியாக நடிக்க வைக்க படக்குழுவினர் முடிவு செய்து இருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது.

விளம்பரம்

Leave a Comment