ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் மாணவர் சங்கத்தை அதன் அலுவலகத்தை காலி செய்யுமாறு பல்கலைக்கழக நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்தியாவின் புகழ் பெற்ற பல்கலைக்கழகமான டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆண்டு தோறும் மாணவர் சங்க தேர்தல் நடத்தப்பட்டு, நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார்கள். இதில் கடந்த செப்டெம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் இடதுசாரிக் கட்சிகளின் ஐக்கிய முன்னணி அமைப்பு வெற்றி பெற்று இந்திய மாணவர் கூட்டமைப்பு ஆயி கோஷ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில், பல்கலைக்கழகத்தின் டீன் உமேஷ் கதம் வெளியிட்டுள்ள நோட்டீஸில் மாணவர் சங்க அலுவலகத்தை உடனடியாக காலி செய்யுமாறு தெரிவித்துள்ளார்.
அதில், பல்கலைக்கழக மாணவர் சங்க நிர்வாகம் இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆகையால் சொத்துக்களை தவறாக பயன்படுத்தப்படுவதை வகையில், முறையான நிர்வாகம் அறிவிக்கப்படும் வரை அதனை பூட்டப்பட்ட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் அலுவலகத்தை காலி செய்ய மறுத்துவிட்டனர். மாலை 5 மணியளவில், காவலர்கள் வந்திருந்தனர். ஆனால்மாணவர்கள் அதிக அளவில் திரண்டிருந்ததால், அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. நாங்கள் எந்த காரணத்திற்கும் இந்த அலுவலகத்தை விட்டுதர மாட்டோம் என்று துணைத் தலைவர் சாகேத் மூன் கூறினார்.
மாணவர்களுக்கு சொந்தமானது, எங்கள் இடங்களை மூடுவதற்கு பல்கலைக்கழக நிர்வாகத்தின் எந்த அதிகாரத்திலும் இல்லை. இதுவரை இல்லாத அளவிற்கு மிக அடிமட்ட நிலைக்கு பல்கலைக்கழக நிர்வாகம் தற்போது செயல்பட்டு வருகிறது என மாணவர் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னரும், அதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை பல்கலைக்கழகம் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.