
தமிழகத்தில் பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு வினாத்தாள் சமூக வலைத்தளங்களில் வெளியானதால் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் 10,11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வு இந்த செப்டம்பர் மாதம் 12-ம் தேதியன்று தொடங்கப்பட்டது. தற்போது தேர்வு நடைபெற்று வரும் நிலையில் சமூக வலைத்தளங்களில் கம்பியூட்டர் அப்ளிகேஷன் (கணினி பயன்பாட்டு) பாடத் தேர்வுக்கான வினாத்தாள் வெளியானதால் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 12 மாணவர்களுக்கு தேர்வு காலையில் நடத்தப்படுகிறது. பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு பிற்பகலில் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தேர்வுக்கு முன்னரே ஷேர் சேட் என்று அழைக்கப்படும் செயலியில் (ஆப்) கல்வி மற்றும் தொழல்நுட்பம் என்னும் பக்கத்தில் வினாத்தாள் கசிந்து வருவதாக கூறப்படுகிறது.
மேலும் தேர்வறையில் வழங்கப்படும் வினாத்தாளும் கைப்பேசி செயலியில் வெளியான வினாத்தாளும் ஓரே மாதிரியாக இருப்பதால் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதே போல் கடந்த திங்கட்கிழமை அன்று நடைபெற்ற 11-ம் வகுப்பின் வணிகவியலின் வினாத்தாள் ஞாயிறு அன்றே வெளியாகியுள்ளது.
ஆதலால் பள்ளிக்கல்வித்துறை யார் இவ்வாறு வினாத்தாளை வெளியிடுகின்றார் என்று கண்டுபிடிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.