வித்தியாசமான ஸ்டேன்ஸ் மற்றும் வித்தியாசமான ஷார்ட் தேர்வு மூலம் தனது சிறப்பான ஆட்டத்தை ஸ்மித் வெளிப்படுத்துவதாக இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த ஆஷஸ் தொடர் போட்டியில் 2-2 என தொடர் டையில் முடிந்தது. இத்தொடரில் 4 போட்டிகளில் பங்கேற்ற ஆஸ்திரேலியா அணியின் ஸ்மித், 774 ரன்கள் குவித்து தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஒரு வருட தடைக்கு பிறகு விளையாடி வரும் இவர், இந்த தொடரில் 144, 142, 92, 211, 82, 80, 23 என மொத்தம் 7 இன்னிங்சில் 774 ரன்கள் எடுத்து கவாஸ்கரின் சாதனையை சமன் செய்தார்.

இந்தியாவின் முன்னணி கிரிக்கெட் நட்சத்திரமான சச்சின் டெண்டுல்கர் , ஆஸ்திரேலியா அணியின் வீரர் ஸ்மிதின் ஆட்டத்தை குறித்து வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அதில், முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து பௌலர்கள், ஸ்லிப் பகுதியில் விக்கெட்டை எடுக்க முயல்கின்றன. அப்போது ஸ்மித் லெக் ஸ்டம்ப் பந்து வீச்சாளர்களுக்கு தெரியும்படி விலகி நிற்கிறார். மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஷாட்களை மட்டுமே பயன்படுத்தினார்.
அதே போல, லாட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியிலும், லெக் சைடில் ஸ்லிப்பை நிற்க வைத்து ஆர்ச்சர் பவுன்சராக வீசினார். தனது பேட்டிங் நுட்பத்தால் பவுன்சர் பந்தை அடித்து ஆடாமல் தடுத்தாட முயன்றார் ஸ்மித்.
அதுவரை அவர் நின்றிருந்த நிலை மாறியதாலே அவர் பவுன்சர் பந்தால் தாக்கப்பட்டார். இதையடுத்து அவர் தனது ஆட்ட உத்தியை மாற்றிக்கொண்டார் என்று தனது விடியோவில் ஸ்மித் ஆடிய விதம் குறித்து விரிவாகப் பேசியுள்ளார் சச்சின் டெண்டுல்கர்.
மேலும் கடைசியாக விளையாடிய இரு போட்டிகளில், பவுன்சர் பந்துகள் வரும்போது முன்னோக்கி குனிந்து கொள்கிறார். ஸ்மித் தனது சிறப்பான நுட்பத்தினால் புத்திசாலித்தனமாக விளையாடினார். அவர் பயன்படுத்திய நுட்பங்கள் சிக்கலானவை. ஆனால் ஒருங்கிணைக்கப்பட்டு இயங்கிய மனநிலை அவரது ஆட்டத்தை சிறப்பாக அமைத்து கொடுத்தது என தெரிவித்துள்ளார்.