இன்றைய தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி விஜய். இவரது ஒரு புகைப்படம் போதும் மொத்த சோசியல் மெடியவையும் தொம்சம் செய்துவிடும். அந்த அளவிற்கு மிக பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகர் தளபதி விஜய். பல விமர்சனங்களுக்கு மத்தியில் இன்று தமிழ் சினிமாவின் வசூல் மன்னனாக அவதாரம் எடுத்துள்ளார் தளபதி விஜய். பல கோடி நெஞ்சங்களை ரசிக்க வைத்த

தளபதி இன்று மிக பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறார். இவர் இறுதியாக நடித்து வெளி வந்த படம் மாஸ்டர். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். மாஸ்டரின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் Beast படத்தில் நடித்துவருகிறார் விஜய். சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தாயாருக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது விறு விறுப்பாக நடந்த்து வருகிறது.

சமீபத்தில் விஜய் பிறந்த நாளன்று இந்த படத்தின் first look போஸ்டர் வெளியாகியிருந்தது. தளபதி 65 ஆன beast படத்தை பற்றி பல தகவல்கள்; வெளிவந்து கொண்டிருக்க, விஜய் நடிக்க போகும் தளபதி 66 படத்தை பற்றிய சுவாரசியமான தகவல் வெளிவந்துள்ளது.

இந்த படத்தை தெலுகு பட இயக்குனர் வம்ஷி இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இந்த படத்திற்கு தளபதி விஜயின் சம்பளம் 120 கோடி பேசப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இதன் மூலம் தென்னிந்திய நடிகர்களில் தற்போது அதிக சம்பளம் வாங்கும் ஹீரோவாக மாறியுள்ளார் விஜய்.
