பசுபதி கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் பூஜை! வைரல் புகைப்படம்

தூள், சுள்ளான், திருப்பாச்சி, மதுர, அருள் போன்ற படங்களில் வில்லனாக நடித்து தூள் கிளப்பியவர் நடிகர் பசுபதி. இவர் படத்தில் நடிக்கும் முன்பு சென்னையிலுள்ள “கூத்துபட்டரை” தியேட்டரில் இணைந்து நடிப்பைக் கற்றுக் கொண்டார். பிறகு ‘மருதநாயகம்’ படத்தில் நடித்தார். ஆனால் அது வெளியாகவில்லை.

பசுபதி கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் பூஜை! வைரல் புகைப்படம் 1

விளம்பரம்

பின்னர் விருமாண்டி, ஈ, படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து ஈ படத்திற்காக விருதுகளையும் பெற்றார். வெயில், குசேலன் படங்களில் முன்னனி கதாநாயகனாக நடித்து அனைவரிடமும் பாராட்டைப் பெற்றார். சமீபத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தில் ரங்கன் வாத்தியார் ரோலில் அசத்தியிருப்பார். இவர் கன்னடம், மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

பசுபதி கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் பூஜை! வைரல் புகைப்படம் 3

தற்போது அடுத்த படத்திற்கான பூஜையும் நடக்கவுள்ளது. இவர் தான் முன்னனி நடிகர். ரோஷிணி, மயில்சாமி, அம்மு அபிராமி ஆகியோருடன் இணைந்து ராம் சங்கையா இயக்கத்தில் எடுக்கப்படுகிறது. கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையில் இன்று பாடல் பதிவுகள் தொடங்கவுள்ளன. இப்படத்தை ‘பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம்’ தயாரிக்கிறது.

விளம்பரம்
பசுபதி கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் பூஜை! வைரல் புகைப்படம் 5
விளம்பரம்

Leave a Comment