பல திரில்லர் படங்களை நமக்கு அளித்து வருபவர் இயக்குனர் மிஷ்கின். கடந்த ஆண்டு வெளியான ‘சைகோ’ படம் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆனது. இவர் ஏற்கனவே பிசாசு, துப்பறிவாளன், முகமூடி, போன்ற திரில்லர் படங்களை இயக்கி மக்கள் இவர் மீது இருந்த எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளார்.ஷண்முக ராஜா என்கிற மிஷ்கின் ‘நந்தலாலா’ என்ற படத்தின் மூலம் நடிகராகவும்

அறிமுகமானவர். இவர் பாடகர், திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர். தற்போது இவர் பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குகிறார். ஆண்ட்ரியா, விஜய் சேதுபதி, பூர்ணா, ராஜ்குமார் பிச்சுமணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ராக் ஃபோர்ட் என்டர்டைன்மன்ட் தயாரிப்பில் 2022 வெளிவரும் என எதிர்ப்பார்க்கப் படுகிறது.

இந்நிலையில் நடிகர் அஜ்மல் அமீர் இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே இருவரும் ‘அஞ்சாதே ‘ படத்தில் இணைந்து பணியாற்றினர். நெற்றிக்கண் படத்தில் அஜ்மல் சிறந்த வில்லனாக நடித்தது நமக்கு தெரிந்த ஒன்றே. ஆதலால் பிசாசு 2 படம் நல்ல ஹிட் கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாகி வருகிறது.
