கோலிவுட்டில் இப்பொது பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயம் இயக்குனர் விக்னேஷ் சிவன் நடிகை நயன்தாராவின் திருமணம் குறித்தே. வருகிற ஜூன் 9 ஆம் தேதி திருப்பத்தில் நடக்கவுள்ள இவர்களது திருமணம் குறித்து செய்தியை தான் ரசிகர்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர். நானும் ரவுடி தான் படத்தில் சந்தித்த இவர்கள் கடந்த 7 வருடங்களாக காதலித்து வருகின்றனர்.
கேரளாவை பூர்விகமாக கொண்ட நயன்தாரவும், தமிழகத்தை பூர்விகமாக கொண்ட இயக்குனர் விக்னேஷ் சிவனும் திருமண இருவீட்டர் சம்மதத்துடன் நடைபெற உள்ளது. ஆனால் சமீபத்தில் பேசிய விக்னேஷ் சிவனின் பெரியப்பா இது குறித்து தனனுடைய வருத்தத்தை தெரிவித்து உள்ளார்.
இயக்குனர் விக்னேஷ் சிவனின் சொந்த ஊர் லால்குடி. சிவக்கொழுந்து மற்றும் மீனாகுமாரி தம்பதிக்கு விக்னேஷ் சிவன் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இரண்டு குழந்தைகள். விக்னேஷ் சிவனின் பெரியப்பா மாணிக்கம் என்பவருக்கு குழந்தை இல்லை என்பதால் விக்னேஷ் சிவன் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவரையும் தங்களுடைய சொந்த குழந்தை போல வளர்த்து வந்தனர்.

ஆனால் பணி நிமித்தம் காரணமாக விக்னேஷ் சிவனின் தாய் தந்தை கடந்த 1970களிலேயே சென்னை வந்துவிட்டனர். அதன்பின்பு விக்னேஷ் சிவன் குடும்பத்திற்கும் தங்களது குடும்பத்துக்கும் பெரிதாக தொடர்பு இல்லை என கூறியுள்ள விக்னேஷ் சிவனின் பெரியப்பா மாணிக்கம், விக்னேஷ் சிவனின் தங்கை ஐஸ்வர்யா திருமணத்திற்கு தன்னை அழைக்கவில்லை என வருத்தத்துடன் கூறியுள்ளார்.
இந்தநிலையில் தற்போது நடிகை நயன்தாராவை விக்னேஷ் சிவன் திருமணம் செய்யப் போகும் நிலையில் இதுவரை எங்களுக்கு எந்தவித அழைப்பு விடுக்கவில்லை என்பது மன உளைச்சலாக இருப்பதாக மாணீக்கம் வருத்தத்துடன் கூறியுள்ளார். இருப்பினும் விக்னேஷ் சிவன் எங்களது மகன் என்பதால் எங்கிருந்தாலும் நலமுடன் வாழ வேண்டும் என்பதே எனது ஆசை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.<