இசைமைப்பாளரா இருந்து போர் அடிச்சிடுச்சு போல!!திரையுலகில் அடுத்த அவதாராம் எடுக்கும் அனிருத்!!

3 என்ற படத்தில் அறிமுகமாகி, முதல் படத்திலேயே அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் அனிருத். முக்கியமாக அனிருத் இசையமைத்து தனுஷ் பாடிய “கொலவெறி டி” பாடல் உலகளவில் பெரிய வெற்றியை பெற்றது. தனுஷால் அறிமுகம் செய்யப்பட்ட இவர் தொடர்ந்து தனுஷின் தயாரிப்பில் வெளியான சிவா கார்த்திகேயன் படங்களான “எதிர் நீச்சல், மான் கராத்தே” போன்ற படங்களுக்கு இசைமயக்க நடிகர் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயனின் ஆஸ்தான இசைமைப்பாளராக மாறிப்போனார்.

இசைமைப்பாளரா இருந்து போர் அடிச்சிடுச்சு போல!!திரையுலகில் அடுத்த அவதாராம் எடுக்கும் அனிருத்!! 1

விளம்பரம்

“வேலையில்லா பட்டதாரி,கத்தி,வேதாளம்,காக்கி சட்டை,பேட்ட,தர்பார்,மாஸ்டர்” என தொடர் வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக திகழ்கிறார். மேலும் பல இசை அமைப்பாளர்களுக்கு பாடல்கள் பாடியும் கொடுத்துளளார். நடுவில் தெலுங்கு படங்களுக்கும் இசையமைத்தார்.

இப்பொது வரும் பெரிய நடிகர் படங்களில் இவர் தான் இசை என ரசிகர்களே கேட்கும் அளவிற்கு உச்சம் தொட்டுள்ளார். வரவிருக்கும் விக்ரம் படத்திற்கும் இவர் தான் இசை. அண்மையில் இவர் இசையில் பீஸ்ட்,கத்துவாக்குல ரெண்டு காதல், டான் போன்ற படங்களுக்கு இசையால் ரசிகர்களை ஆட்கொண்டார்.

விளம்பரம்
தொடர்புடையவை  நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இயக்குனர் ராம் இயக்கும் 'ஏழு கடல் ஏழு மலை' படத்தின் Glimpse வீடியோ வெளியானது.!

அடுத்த வரவிருக்கும் தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு இசையமையாக்க இவருக்கு பெரிய தொகை பேசப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், இப்பொது இவர் அடுத்த பறிமாற்றத்திற்கு ரெடி ஆகி வருகிறார்.

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனின் ஓடிடி தயாரிப்பான “ஆஹா தமிழில்” இவர் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. அந்த தளத்திற்கு ஒரு டாக் ஷோவ்வை நடத்தி கொடுக்க அனிருத்தை அணுகியுள்ளாராம் தயாரிப்பு நிறுவனம்.

விளம்பரம்

இன்னும் அதிகாரப்பூர்வமாக செய்தி கிடைக்காத நிலையில், கிட்டத்தட்ட அவர் அந்த நிகழ்ச்சியை நடத்த ஒப்புக்கு கொண்டதாக தெரிகிறது. திரை துறை நட்சதிரங்கள் பலருடன் நட்பில் இருக்கும் இவர் அந்த நிகழ்ச்சியை நடத்தினால் ரசிகர்களும் விரும்பி பார்க்க கூடும் என்ற முடிவில் அவர்கள் அநிருதிடம் பேச்சுவார்த்தை நடித்தியுள்ளதாக தெரிகிறது.

இசைமைப்பாளரா இருந்து போர் அடிச்சிடுச்சு போல!!திரையுலகில் அடுத்த அவதாராம் எடுக்கும் அனிருத்!! 3

விளம்பரம்

ஏற்கனவே ஆஹா தெலுங்கில் முன்னணி நடிகர் பாலகிருஷ்ணா நடத்திய “unstoppable with NBK” பெரிய வெற்றி என்பதால், அதே பணியில் இங்கும் ஒரு ஷோவ்வை தயரிப்பு நிறுவனம் நடத்த முடிவெடுத்து வேலைகள் செய்ய தொடங்கியுள்ளது.

தொடர்புடையவை  மதுர வீரன் பாடலுக்கு கார்த்திக்குடன் இணைந்து மேடையில் செம்ம கியூட் ஆக ஆடிய அதிதி

இசையமைப்பாளராக வெற்றி கோடி நட்டுள்ள அனிருத், இந்த பரிமாணத்திலும் வெற்றி அடைவர் என ரசிகர்கள் அந்த நிகழ்ச்சியை எதிர்பார்த்து காத்துள்ளனர்.

விளம்பரம்

இசைமைப்பாளரா இருந்து போர் அடிச்சிடுச்சு போல!!திரையுலகில் அடுத்த அவதாராம் எடுக்கும் அனிருத்!! 5

விளம்பரம்

Leave a Comment