கமலை இவளோ ஜாலியா பாத்ததே இல்லை..சூப்பர் சிங்கரில் குழந்தைகளுடன் விளையாடிய கமல்

தமிழ் திரையுலகின் ஜாம்பவான் கமலஹாசன். உலகநாயகன் என்ற சொல்லுக்கு பொருத்தமானவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற பல மொழிகளில் கலக்கியவர். 1960ம் ஆண்டில் வெளிவந்த களத்தூர் கண்ணம்மா என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று வரை நடித்துக் கொண்டிருக்கும் கலை நாயகன். நடிப்பை தாண்டி நடனம், பாடுவது, பாடல் எழுவது, வசனம் எழுதுவது என பன்முகத் திறமையாளர்தான் கமலஹாசன். வித்தியாசமான கதைகளும், அதற்காக கமல் செய்யும் உழைப்பும் உண்மையில் பாராட்டத்தக்கவை. வீடியோ கீழே உள்ளது.

கமலை இவளோ ஜாலியா பாத்ததே இல்லை..சூப்பர் சிங்கரில் குழந்தைகளுடன் விளையாடிய கமல் 1

விளம்பரம்

 

அதற்கு உதாரணமாக சொல்ல வேண்டுமெனில் தசாவதாரம் படத்தை சொல்லலாம். மூன்று மணி நேரம் படத்தில் 10 வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து இருப்பார். குணா, தேவர் மகன், அபூர்வ சகோதரர்கள், அவ்வை சண்முகி, பஞ்சதந்திரம், விருமாண்டி, அன்பே சிவம், வசூல்ராஜா, வேட்டையாடு விளையாடு, பாபநாசம் போன்ற படங்கள் கமலஹாசனின் நடிப்பில் வெளியான அற்புதமான படங்கள். பல திரைப்பட விருதுகள், தேசிய விருதுகள், ஃபிலிம்பேர் விருதுகள், பத்ம பூஷன் என பல விருதுகளுக்கு சொந்தக்காரர். Youtube Video Code Embed Credits: Vijay Television

விளம்பரம்

கமலை இவளோ ஜாலியா பாத்ததே இல்லை..சூப்பர் சிங்கரில் குழந்தைகளுடன் விளையாடிய கமல் 3

தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து முடித்துள்ளார். படம் ஜூன் 3ம் தேதி வெளியாகிறது. அந்த படத்தின் ப்ரோமஷனுக்காக சூப்பர் சிங்கருக்கு சென்றுள்ளார் கமல். அங்கு குழந்தைகளுடன் மிக ஜாலியாக ஆடி பாடி குழந்தைகளை மடியில் அமர வைத்து பேசிக் கொண்டிருக்கிறார். பின்னர் பத்தல பத்தல பாடலை பாடுகிறார். இந்த காணொலியை பகிர்ந்து ஆண்டவரை இவ்வளவு ஜாலியா பார்த்ததே இல்லை என்று கமல் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். அந்த காணொலியை நீங்களும் காண..கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்..Watch the below video

விளம்பரம்
தொடர்புடையவை  உன்னாலே உன்னாலே விண்ணாளச்சென்றேனே..! காதலியுடன் டேட்டிங் செய்த நடிகர் வினய்..!

விளம்பரம்

Leave a Comment