- நடிகர் அருண்விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் யானை. இயக்குனர் ஹரி மற்றும் அருண் விஜய் கூட்டணியில் வெளியாகவுள்ள இந்த திரைப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்புகள் எல்லாம் நிறைவடைந்து சில பிண்ணனி பணிகள் மட்டும் நடந்து வருகின்றன. சமீபத்தில் வெளியான Yaanai Movie-ன் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. இயக்குநர் ஹரி கடைசியாக இயக்கிய படம் சாமி 2. இந்த படம் 2018ம் ஆண்டு வெளியானது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு இந்த படம் வெற்றி பெறவில்லை, எனவே அடுத்த கூட்டணியாக தனது மச்சான் அருண் விஜய்யுடன் இணைந்து யானை படத்தை இயக்கி வருகிறார் ஹரி.

தற்போது தனது மச்சான் அருண் விஜயை வைத்து ஆக்ஷன் த்ரில்லர் படத்தை எடுத்துள்ளார் ஹரி. கிராமத்து கதைக்களத்தை பிண்ணனியாக கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் குக் வித் கோமாளி புகழ் காமெடியனாக நடிக்கிறார். மேலும் ராதிகா, போஸ் வெங்கட் போன்றவர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படம் தியேட்டரில் ரிலீஸ் ஆன பின்பு அதன் உரிமத்தை ஜீ தமிழ் நிறுவனம் வாங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அருண் விஜய் படம் வெளியாவதற்கு முன்பே அதன் உரிமையை ஒரு தொலைக்காட்சி நிறுவனம் வாங்கியுள்ளது இதுவே முதல் முறையாகும்.

இந்த நிலையில் இந்த படம் வெளியாகும் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ட்ரைலர் வருகின்ற மே மாதம் 30ம் தேதி மாலை 6 மணியளவில் வெளியாகயுள்ளது. அன்றைய தினமே இசை வெளியீட்டு விழாவும் நடக்க உள்ளது. மேலும் இந்த படம் ஜூன் 17ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சூர்யாவுடன் இணைந்து இயக்குனர் ஹரி கொடுத்த சிங்கம் திரைப்படங்கள் போலவே அருண் விஜயுடன் முதல் முறையாக இணைந்த இந்த கூட்டணி வெற்றியை தரும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எகிறி உள்ளது. அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the below yaanai Movie Teaser…