நேற்று இரவு மேடையில் பாடிக் கொண்டிருந்த பிரபல பிண்ணனி பாடகர் கே.கே அவர்கள் மாரடைப்பால் காலமான செய்தி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவர் பாடிக் கொண்டிருக்கும் போதே மேடையில் அசௌகரியமாக உணர்ந்ததால் பாட்டை நிறுத்திவிட்டு மேடையில் இருந்து ஙெளியேறும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. 54 வயதான கே.கேவின் இயற்பெயர் கிருஷ்ணகுமார் குன்னத். கேரளாவில் பிறந்து வளர்ந்த இவர் முதலில் விளம்பரங்களில் மட்டுமே பாடி வந்தார். பின்னர் 90களின் இறுதியில் தமிழில் ஏ.ஆர்.ரகுமானால் அறிமுகம் செய்யப்பட்டார். தமிழில் விஜய், அஜீத், விக்ரம், பிரபு தேவா போன்ற பல முண்ணனி நடிகர்களுக்கு பிண்ணனி பாடியுள்ளார். வீடியோ கீழே உள்ளது

கே.கே தமிழில் பல பிரபலமான பாடல்களை பாடியிருக்கிறார். அவர் இறந்த செய்தி கேட்ட பிறகு கூகுளில் தேடிப் பார்த்த போது அடடே நமக்குப் பிடித்த இத்தனை பாடல்களை இவர் பாடியிருக்கிறார் என்று நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர். மின்சார கனவு படத்தில் ஸ்டாராபெரி கண்ணே, 12B படத்தில் ஒரு புன்னகை பூவே, ரெட் படத்தில் ஒல்லிக்குச்சி உடம்புக்காரி, காக்க காக்க படத்தில் உயிரின் உயிரே, கில்லி படத்தில் அப்படி போடு, மன்மதன் படத்தில் காதல் வளர்த்தேன், 7ஜி ரெயின்போ காலணி படத்தில் நினைத்து நினைத்து பார்த்தேன், எம்.குமரன் படத்தில் நீயே நீயே, தூள் படத்தில் குண்டு குண்டு, சாமி படத்தில் கல்யாணந்தான் கட்டிக்கிட்டு போன்ற பல நல்ல பாடல்களை பாடியுள்ளார்.

இவர் நேற்று இரவு கொல்கத்தாவில் ஒரு கல்லூரியின் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்று இருந்தார். ஒரு மணி நேரமாக பாடிக் கொண்டிருந்த அவருக்கு திடீரென அசௌகரியமாக உணரவே பாட்டை நிறுத்திவிட்டு மைக்கை அருகில் இருந்தவரிடம் கொடுத்து விடுகிறார். பின்னர் பின்னால் இருந்தவர்களிடம் ஏதோ கூற அவர்கள் கைத்தாங்கலாக அவரை அழைத்துச் செல்கின்றனர். ஹோட்டலுக்கு சென்ற அவர் மாடிப்படிகட்டில் மயக்கமுற்று கீழே விழ, கொல்கத்தா CMRI மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். இதனால் கே.கேவின் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
The very moment when #KK felt uneasy and was taken to CMRI hospital, #Kolkata. He was declared brought dead.
He performed the show and ended it.#RIP #KK Not KK pic.twitter.com/WFOHKdCqFn
— Madhuri Rao (@madhuriadnal) June 1, 2022
கே.கேவின் இறப்பு செய்தி கேட்டு தான் மிகவும் உடைந்து விட்டதாகவும், உன்னுடைய உயிரின் உயிர் மறைந்துவிட்டது என்றும் தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை பதிவிட்டுள்ளார் ஹாரிஸ் ஜெயராஜ். திரை பிரபலங்கள் பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர். கே.கேவுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். மகன் பாடகராகவும், மகள் இசைக்கலைஞராகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வீடியோ கீழே உள்ளது
#EXCLUSIVE
The very moment when playback singer KK was being taken back to hotel after he complained about his health condition. He has been declared brought dead by the doctors of CMRI. #KK #NewsToday #KKsinger #KKDies #kkdeath #SingerKK@ANI @MirrorNow @TimesNow @htTweets pic.twitter.com/zX5A2ZPvTW— Tirthankar Das (@tirthaMirrorNow) May 31, 2022