“எவ்வளவு நெஞ்சழுத்தம் இருந்தால் விஜய் அப்படி கூறுவார்” !!”யாரும் அவருடைய படங்களை பார்க்க வேண்டாம்’!! ஆவேசமாக பேசிய மதுரை ஆதீனம்!!!

தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான “பீஸ்ட்” திரைப்படம் கலவையான விமர்சங்களை பெற்ற போதிலும் இவருடைய ஸ்டார் இமேஜ் மட்டுமே படத்தை 200 கோடிக்கு மேல் வசூல் செய்ய வைக்கும் அளவிற்கு உள்ளது.அடுத்தாக இவர் தெலுங்கு இயக்குனர் வம்ஷி படிப்பாளி இயக்கத்தில் “தளபதி 66” படத்தில் நடித்து வருகிறார். இதில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஷியாம், ரஷ்மிகா மந்தன்னா என பலர் நடிக்கின்றனர்.  வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது. "எவ்வளவு நெஞ்சழுத்தம் இருந்தால் விஜய் அப்படி கூறுவார்" !!"யாரும் அவருடைய படங்களை பார்க்க வேண்டாம்'!! ஆவேசமாக பேசிய மதுரை ஆதீனம்!!! 1

கடந்த 2017ஆம் ஆண்டு அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், எஸ்.ஜே.சூரியா நடிப்பில் வெளியான படம் மெர்சல். இந்த படத்தில் விஜய் ஒரு வசனம் பேசுவார். கோவில் விழாவில் நடக்கும் அசம்பாவிதத்தை வைத்து கோவிலுக்கு பதில் இங்கு ஹாஸ்பிடல் கட்டவேண்டும் என கூறுவார் விஜய். இந்த சீன் அந்த படத்தின் கதைக்களத்திற்கு ஏற்றவாறு இருக்கும். பொதுமக்கள் யாரும் குறை கூறவில்லை.

விளம்பரம்

ஆனால் அப்போது பாஜகவை சேர்ந்த எச்.ராஜா இதனை கடுமையாக விமர்சனம் செய்தார். அதுவரை எச்.ராஜா யாரென்றே தெரியாமல் இருந்த சிலர் கூட இந்த பிரச்சினையினால் தெரிந்து கொண்டனர். அவருக்கு ஒரு நல்ல நெகட்டிவ் பப்லிசிட்டி கிடைத்தது. அவர் அப்போது நடிகர் விஜயை “ஜோசப் விஜய்” என கூறி விமர்சித்தார். அது பெரும் அதிர்வலைகளை கிளப்பியது.

தொடர்புடையவை  ராட்சசன் மாதிரி அடுத்த பிளாக் பஸ்டர் படம் ரெடி..! அருண் விஜயின் சினம் ட்ரைலர் வெளியானது.

"எவ்வளவு நெஞ்சழுத்தம் இருந்தால் விஜய் அப்படி கூறுவார்" !!"யாரும் அவருடைய படங்களை பார்க்க வேண்டாம்'!! ஆவேசமாக பேசிய மதுரை ஆதீனம்!!! 3

விளம்பரம்

தற்போது இந்த லிஸ்டில் புதிதாக இணைந்திருப்பவர் மதுரை ஆதீனம். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய மதுரை ஆதீனம், ‘திருக்கோவில்கள் அரசியல்வாதிகளின் கொள்ளை கூடாரமாக மாறியுள்ளது. அதனால் அறநிலையத்துறையை கலைக்க வேண்டும். ஆன்மீகத்தை திருடிக் கொண்டு திராவிடம் என்கிறார்கள்.

"எவ்வளவு நெஞ்சழுத்தம் இருந்தால் விஜய் அப்படி கூறுவார்" !!"யாரும் அவருடைய படங்களை பார்க்க வேண்டாம்'!! ஆவேசமாக பேசிய மதுரை ஆதீனம்!!! 5

விளம்பரம்

மேலும் இந்துக்களை அவமதிக்கும் விதமாக திரைப்படங்களில் பேசிய நடிகர் விஜயின் படங்களை பார்க்காதீர்கள் என்று பேசியது சர்ச்சை ஆகியுள்ளது.’ ஒரு சாமி என்றும் பாராமல் நெட்டிசன்கள் இவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இருப்பினும் இதனை குறித்தெல்லாம் கவலைபடாமல் நடிகர் விஜய் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். தமிழகத்திலுள்ள பா.ஜ.கவினர் பலரும் விஜயை கடுமையாக பல விதங்களில் விமர்சனம் செய்துவந்தாலும், அது அவருடைய வளர்ச்சியை எந்த வகையிலும் பாதித்தாக தெரியவில்லை. அடுத்ததாக வெளிவரவிருக்கும் தன்னுடைய படத்தில் அவர் தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்தியுள்ளார்.

விளம்பரம்

தமிழ் மார்க்கெட்டை தாண்டி தெலுங்கிலும் அவருடைய மார்க்கெட்டை உறுதி படுத்த இப்பொது, தெலுங்கு இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் நடிகளைகளை, இசையமைப்பாளர் என அனைவரும் அங்குள்ள நட்சத்திரங்களையே கொண்டு நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையவை  லியோ படத்தின் டீசருக்காக வெறித்தனமாக கம்போஸ் செய்யும் அனிருத்.! இணையத்தில் கசிந்த வீடியோ.!

விளம்பரம்

Video Courtesy – JayaPlus

விளம்பரம்

Leave a Comment