96 படத்தில் நடிக்கும் வாய்ப்பை நழுவவிட்ட மஞ்சு வாரியர்!!

96 படத்தில் நடிக்கும் வாய்ப்பை நழுவவிட்ட மஞ்சு வாரியர்!! 1

மலையாளத்தில் மிகவும் பிரபலமாகி, தமிழில் அசுரன் படம் மூலம் அறிமுகமானவர் மஞ்சுவாரியர், 96 படத்தில் நடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டதாக சமீபத்தில் கூறியிருக்கிறார்.

மலையாள நடிகையான மஞ்சு வாரியர், தமிழ் திரையுலகில் அசுரன் படம் மூலம் அறிமுகம் ஆகியுள்ளார். இந்த படத்தில் நடித்த அனுபவம் பற்றி கூறும்போது, ‘இந்த கதாபாத்திரத்தை நான் ஏற்க தனுஷ்தான் காரணம். அவர்தான் என்னை இந்த படத்தில் நடிப்பதற்கு சிபாரிசு செய்தார். அதே சமயம் இந்த படத்துக்கு முன்பாகவே தமிழில் 96 படத்தில் நான் நடிக்க வேண்டியது. அதில் திரிஷா வேடத்தில் முதலில் என்னிடம்தான் நடிக்க சொல்லி கேட்டிருக்கிறார்கள். ஆனால் இயக்குனர் பிரேம்குமாரால் என்னை தொடர்புகொள்ள முடியவில்லை என்றார்.ஆனால் இந்த தகவல் எனக்கும் அதிர்ச்சியாக இருந்தது.

விளம்பரம்

என்னிடம் நேரடியாகவே கேட்டிருந்தால் கூட 96 படத்தில் நடித்திருப்பேன். இருந்த போதும் திரிஷா இந்த வேடத்தில் நன்றாக நடித்திருந்தார். அவரை தவிர வேறு யாராலும் இந்த வேடத்தில் சரியாக நடிக்க செய்திருக்க முடியுமா என தெரியவில்லை’ என்றார்.

விளம்பரம்

Leave a Comment