
உடல் நலக்குறைவால் சென்ற மூன்று நாட்களாக அமிதாப்பச்சனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இவர் சிகிச்சை பெற்று வருகிறார் எனவும் கூறப்படுகிறது.
இந்திய திரையுலகில் மிகவும் புகழ்பெற்ற பிரபலங்களில் ஒருவர் அமிதாப் பச்சன். 77-வயதான இவருக்கு கடந்த 1982 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு விபத்து காரணமாக சிகிச்சை எடுத்துக்கொண்ட போது ஹெபிடைடிஸ் பி வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், அவரது கல்லீரல் 75 சதவீதம் அளவுக்கு பாதிப்பு அடைந்தது. அன்று முதல் கல்லீரல் பிரச்னையால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தாலும் சினிமா, டிவி நிகழ்ச்சிகள் என தொடர்ந்து சுறுசுறுப்பாக அமிதாப் பச்சன் இயங்கி வருகிறார்.
இந்நிலையில், கடந்த செவ்வாய்கிழமை(அக்15) நள்ளிரவு 2 மணிக்கு, திடீர் உடல் நலக்குறைவால், சிட்டி மருத்துவமனையில் அமிதாப் பச்சன் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவுக்கு(ஐசியூ) இணையான தனி அறையில், கடந்த 3 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.