அஜித்தின் 60வது படத்தின் தலைப்பு வெளியீடு!!

அஜித்தின் 60வது படத்தின் தலைப்பு வெளியீடு!! 1

இயக்குநர் H.வினோத் இயக்க உள்ள அஜித் நடிக்கும் 60வது படத்திற்கு ‘வலிமை’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இயக்குநர் H.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘நேர்கொண்ட பார்வை’. இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து அஜித்தின் 60வது படத்தையும் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாக உள்ளது. இதையும் போனி கபூர்தான் தயாரிக்க உள்ளார். படத்திற்கு யுவன் சங்கர் இசையமைக்கிறார்.


இந்த நிலையில், படத்தின் பூஜை இன்று போனி கபூரின் சென்னை அலுவலகத்தில் நடைபெற்றது. படத்தின் தலைப்பு வெளியிடப்பட்டுள்ளது. படத்திற்கு, ‘வலிமை’ என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவி்த்துள்ளது. அஜித் படத்திற்கான தலைப்பு வெளியாகியுள்ள நிலையில் அவரது ரசிகர்கள் இந்திய அளவில் அதனை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

விளம்பரம்

இதற்கு முன்னர் ஒரு நடிகர் படத்தின் தலைப்பை வெளியிடாமல், படத்தின் எண்ணிக்கையை வைத்து தலைப்பு வெளியிட்டது அஜித் படத்தில் ஒன்றில் இருந்துதான். தற்போது அதை மாற்றும் விதமாக பூஜை அன்றே அஜித் படத்தின் தலைப்பு வெளியிடப்பட்டிருப்பது என்பது குறிப்பிடத்தக்கது தேவையற்ற எதிர்பார்ப்பை உண்டாக்க வேண்டாம் என்ற எண்ணத்தில் தலைப்பு வெளியிடப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.இந்தப்படம் 2020 ஆண்டு கோடைகால கொண்டாட்டமாக வெளியிட படக்குழு திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

விளம்பரம்

Leave a Comment