பல பிரபலங்களை விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி களமிறக்கியுள்ளது. இதில் கலந்துக்கொண்டது மூலம் பிரபலமடைந்தவர்களும் அதிகம். அவ்வாறாக நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்று பிரபலமடைந்தவர் ஆர்.ஜே.வைஷ்ணவி. இவர் தனியார் நேரலையில் ரேடியோ ஜாக்கியாகவும் பிரபலமானவர் ஆவார்.

திருமணமாகி இப்பொது கணவருடன் வசித்து வரும் இவர் எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இயங்க கூடியவர். எப்போதும் கணவருடன் வெளிநாட்டிற்கு சென்று விடியோக்கள், புகைப்படங்கள் வெளியிடுவது என இவருக்கு இன்ஸ்டாகிராமில் கிட்டத்தட்ட 80ஆயிரம் பின்தொடருபவர்களை கொண்டுள்ளார். இப்பொது இவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதாவது ஆர்.ஜே.வைஷ்ணவி தன்னுடைய வீட்டின் அருகில் தான் வளர்க்கும் நாயுடன் வாக்கிங் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த நபர் ஒருவர் அவரை பின்தொடர்ந்துள்ளார். ஆனால் சாதாரணமாக போன் பேசுவது போல் நடித்து கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் அவருடைய வீட்டின் அருகில் சுற்றியுள்ளார். ஏற்கனவே அந்த நபர் இவரை வாகனத்தில் தன்னை பின்தொடர்ந்து வந்ததை கவனித்துள்ள இவர், வீட்டின் அருகே அவர் நின்று இருப்பதை கண்டு பதறிப் போயுள்ளார்.

கொஞ்சம் சுதாரித்து கொண்டு தான் தங்கியிருக்கும் வீட்டை வாலிபர் தெரிந்து கொள்ள கூடாது என 30 மணி நிமிடம் வீட்டுக்கு செல்லாமல் பதட்டத்துடன் இருந்ததாகவும், அதன்பின்னர் அந்த வாலிபருக்கு தெரியாமல் வீட்டிற்கு சென்றதாகவும் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் தனக்குத் தொந்தரவு தரும் அந்த நபர் குறித்து புகார் அளிப்பதற்காக செல்போன் பேசுவது போல் வீடியோ படம் எடுத்து வெளியிட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

வைஷ்ணவி செய்துள்ள இந்த காரியத்திற்கு போலீசார் தரப்பில் இருந்து சமூக வலைதளம் மூலம் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புகார் குறித்து விசாரணை நடத்துவதாகவும் இதுபோன்று நிலைகளில் 100 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறும் அல்லது காவலன் உதவி என்ற செயலியை பாதுகாப்பிற்காக பயன்படுத்திக் கொள்ளுமாறும் சென்னை காவல்துறை சமூக வலைதளம் மூலம் பதில் அளித்துள்ளது.

அந்த நபரை குறித்து வீட்டின் செக்யூரிட்டியிடம் காட்டி இவரை இதற்கு முன்னால் பார்த்ததுண்டா என கேட்க, காவலாளியோ, “இவரை இதே தெருவில் ஏற்கனவே ஒரு பெண்ணை தொந்தரவு செய்த பொது நான் பார்த்துகிறேன்” என அவர் கூறியதாகவும், பெண்களின் பாதுகாப்பிற்காக இவரை போன்றோரை எதாவது செய்ய வேண்டும் எனவும் அவர் தற்போது பதிவிட்டுள்ளார். 