நிம்மதியா இருக்க விடுங்க..தவறான தகவல் போடாதீங்க..கணவர் இறப்புக்கு பின் மீனா போட்ட முதல் பதிவு

இறந்து போன தன் கணவர் குறித்து தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்றும் நடிகை மீனா வேண்டுகோள் விடுத்துள்ளர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மீனாவின் கணவர் காலாமானர். இந்த செய்தி திரையுலகத்தை மட்டுமல்லாது, ஒட்டு மொத்த தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியிருந்தது. அவர் கொரோனாவால் இறந்துவிட்டார் என சிலர் கூற, இல்லை நுரையீரல் பாதிப்பால் இறந்துவிட்டார் என்று கூறினர். ஆனால் அவர் இறப்பிற்கு காரணமாக சொல்லப்பட்டது அவரது நுழையீரல் செயலிழந்து போனது தான். அதற்கு முக்கிய காரணமாக பெங்களூருவில் அவர் வசித்த வீட்டின் அருகே புறாக்கள் அதிகம் இருந்துள்ளது. புறாக்களின் எச்சம் கலந்தை காற்றை அவர் தொடர்ந்து சுவாசித்த காரணத்தால்தான் அவரின் நுரையீரல் செயலிழந்துள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிம்மதியா இருக்க விடுங்க..தவறான தகவல் போடாதீங்க..கணவர் இறப்புக்கு பின் மீனா போட்ட முதல் பதிவு 1

விளம்பரம்

அது குறித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர், டிசம்பர் மாதம் முதலே சுவாசப் பிரச்சினையால் ஆக்ஸிஜன் கருவியின் உதவியுடன் சுவாசித்து வந்த அவருக்கு பிப்ரவரியில் கொரோனா தொற்று ஏற்படவே நிலைமை இன்னும் மோசமானது. இதனால் சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு 95 நாட்களாக எக்மோ கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அரசு சார்பில் மாற்று உறுப்புகளுக்கு எவ்வளவோ முயற்சி செய்தும் அவருடைய ரத்த வகை பொருந்ததால் அவரை காப்பாற்ற முடியவில்லை என்றும் அமைச்சர் கூறினார். இந்த புறா எச்சம் கலந்த காற்றை சுவாசிப்பதன் மூலம் நுரையீரல் தொற்று ஏற்படும் என்பதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.

தொடர்புடையவை  வாழ்நாள் தடை பெற்ற மல்யுத்த வீரர் சதேந்தர் மாலிக், போட்டி நடுவரை தாக்கியதால் இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பு அறிவிப்பு

நிம்மதியா இருக்க விடுங்க..தவறான தகவல் போடாதீங்க..கணவர் இறப்புக்கு பின் மீனா போட்ட முதல் பதிவு 3

விளம்பரம்

இந்த நிலையில் மீனா ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனது கணவரின் இறப்பு குறித்து தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். நான் வேதனையான காலத்தில் இருந்த போது எனக்காக நின்ற அனைவருக்கும் நன்றி என்றும் கூறியுள்ளார். மேலும் கணவரின் உயிரைக் காப்பாற்ற போராடிய மருத்துவ குழுவிற்கும், முதலமைச்சர், சுகாதாரத்துறை அமைச்சர், ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் மற்றும் நண்பர்கள், ரசிகர்களுக்கு என்னுடைய நன்றிகள் என்றும் அவர் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below video..

விளம்பரம்

Youtube video code embed credits: Indiaglitz

விளம்பரம்

Leave a Comment