அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆன விஜய் சேதுபதியின் மகன்.! வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க போவதாக தகவல்

சினிமாவில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தவர் விஜய் சேதுபதி. பின்னர் தன்னுடைய கடின உழைப்பாலும், முயற்சியாலும் இன்று தமிழின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இவர் தென்மேற்கு பருவக்காற்று என்ற படத்தின் மூலம் அறிமுகமான போதிலும், இவருக்கு பேரும் புகழும் கிடைத்த படம் என்றால் அது பீட்சா தான். பின்னர் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, நானும் ரவுடிதான், தர்மதுரை, விக்ரம் வேதா, 96 போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான மாமனிதன். சீனுராமசாமி இயக்கத்தில் நடித்து இருந்தார். அதற்கு முன்பாக விக்னேஷ் சிவன் இயக்கிய காத்து வாக்குல ரெண்டு காதல் இந்த படத்தில் நயன்தாரா மற்றும் சமந்தாவுடன் நடித்திருப்பார்.

அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆன விஜய் சேதுபதியின் மகன்.! வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க போவதாக தகவல் 1

விளம்பரம்

ஹீரோவாக மட்டுமே நடிக்காமல் வில்லனாகவும் பல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியாகி மக்களின் வரவேற்பை பெற்ற படமான விக்ரம் படத்தில், சந்தானம் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார் விஜய் சேதுபதி. மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் அடுத்தடுத்து பல படங்களில் ஒப்பந்தமாகி பிஸியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் விஜய் சேதுபதியின் மகன் நடிக்கும் படத்தின் பற்றிய அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது. இவர் ஏற்கனவே நானும் ரவுடிதான் படத்தில் சிறுவயது விஜய் சேதுபதியாக நடித்திருப்பார், மேலும் சிந்துபாத் போன்ற ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

தொடர்புடையவை  தேசிய விருது பெற்றுள்ள படத்தினை வெளியிட உள்ளார் வெற்றிமாறன்!!

அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆன விஜய் சேதுபதியின் மகன்.! வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க போவதாக தகவல் 3

விளம்பரம்

விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி. இவர் ஏற்கனவே விஜய் சேதுபதி உடன் இணைந்து ஒரு சில படங்களில் நடித்துள்ளார். தற்போது வெற்றிமாறன் இயக்க உள்ள விடுதலை படத்தில் சூர்யா சேதுபதி நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் சூரி ஹீரோவாக களமிறங்குகிறார். எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற நாவலை மையமாகக் கொண்டு இந்த படம் இயக்கப்படுவதாக தகவல்கள் ஏற்கனவே வெளியாகியிருந்தது. இந்தப் படத்திலும் விஜய் சேதுபதி நடிக்கிறார். இளம் வயது விஜய் சேதுபதியாக அவரது மகன் சூர்யா சேதுபதி நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளது.

அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆன விஜய் சேதுபதியின் மகன்.! வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க போவதாக தகவல் 5

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment