எதோ தப்பு இங்க நடக்குது சார்…ஆனா அது என்கிட்ட இருந்து தப்பிச்சிட்டே இருக்கு”!!”ஆர்வத்தை தூண்டும் அருள்நிதியின் டைரி ட்ரைலர்”

இப்போதுள்ள தமிழ் திரையுலகில் பேய் படங்கள் என்றால் எப்படி ராகவ லாரன்ஸ்ஸோ, அதே போல தான் த்ரில்லர் படங்கள் என்றாலே அருள்நிதி தான். “டிமாண்டி காலனி” படம் மூலம் முதல் த்ரில்லர் படம் நடித்த அருள்நிதி அடுத்தடுத்து ஆறாது சினம், இரவுக்கு ஆயிரம் கண்கள், கே-13 என வரிசையாக திரில்லர் படங்கள் மட்டுமே நடித்து வருகிறார். நடுநடுவில் பிரிந்தாவனம், களத்தில் சந்திப்போம் போன்ற படங்களில் தோன்றி ஹிட் அடித்தாலும் அவருக்கென தனி ஹிட் பட்டியல் உருவாக்கியவை இந்த திரில்லர் படங்கள். video given below.

எதோ தப்பு இங்க நடக்குது சார்...ஆனா அது என்கிட்ட இருந்து தப்பிச்சிட்டே இருக்கு"!!"ஆர்வத்தை தூண்டும் அருள்நிதியின் டைரி ட்ரைலர்" 1

விளம்பரம்

என்றைக்குமே தமிழ் சினிமா மட்டுமின்றி உலக சினிமாவில்  எப்போதுமே மக்கள் மினிமம் கரென்டியாக திரில்லர் படங்களை வரவேற்பதால், அருள்நிதியும் அதே கதைக்களத்தில் படங்கள் நடித்து வருகிறார். அண்மையில் இவர் நடிப்பில் வெளியான “D block” மற்றும் தேஜாவு படங்களில் இரண்டுமே திரில்லர் கதைக்களத்தில் தான் வெளியானவை. இப்பொது அதே வரிசையில் அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள படம் “டைரி”.

தொடர்புடையவை  அம்மாவ தனியா விட்டுட்டு போகாத தம்பி..! வெளிநாடு செல்லும் மகனை கண்ணீருடன் வழியனுப்பி வைத்த ராதிகா.!

எதோ தப்பு இங்க நடக்குது சார்...ஆனா அது என்கிட்ட இருந்து தப்பிச்சிட்டே இருக்கு"!!"ஆர்வத்தை தூண்டும் அருள்நிதியின் டைரி ட்ரைலர்" 3

விளம்பரம்

இதனை 5 ஸ்டார் கிரியேஷன்ஸ் சார்பில் எஸ்.கதிரேசன் தயாரித்துள்ளார். படத்தை அறிமுக இயக்குநர்இன்னாசி பாண்டியன் இயக்கி உள்ளார். இவர் கோப்ரா படத்தில் இணை கதாசிரியராக பணியாற்றி உள்ளார். இயக்குனர் அஜய் ஞானமுத்துவிடம் இணை இயக்குனராக பணியாற்றி இப்பொது இயக்குனராக இந்த படம் மூலம் அறிமுகமாகிறார். உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இதன் திரையரங்க வெளியீட்டு உரிமையை கைப்பற்றியுள்ளது.

எதோ தப்பு இங்க நடக்குது சார்...ஆனா அது என்கிட்ட இருந்து தப்பிச்சிட்டே இருக்கு"!!"ஆர்வத்தை தூண்டும் அருள்நிதியின் டைரி ட்ரைலர்" 5

விளம்பரம்

நேற்று நடைபெற்ற விழாவில் நடிகர்கள் சீயான் விக்ரம், உலகநாயகன் கமல்ஹாசன், பாலிவுட் முன்னணி நடிகர் அமீர் கான், உதயநிதி ஸ்டாலின் ,முதலானோர் முன்னிலையில் படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது.

விளம்பரம்

Video Courtesy – Five Star Creations

விளம்பரம்

Leave a Comment