சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள படம்தான் காபி வித் காதல். சுந்தர்.சி, ஜீவா, ஜெய் கூட்டணியில் உருவான கலகலப்பு 2 படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதன் பிறகு மூவரும் இணைந்து நடித்துள்ள படம்தான் காபி வித் காதல். இந்த படத்திற்கான ஷூட்டிங் அனைத்தும் முடிந்து இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. இந்த படத்திற்கு இளையராஜாவும், யுவன்சங்கர் ராஜாவும் இணைந்து இசையமைத்துள்ளனர். இந்த படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை சுந்தர் சியின் மனைவியும், நடிகையுமான குஷ்பூ தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் ஸ்ரீகாந்த்-ம் கதாநாயகனாக இணைந்துள்ளார். மேலும் படத்தில் ஐஸ்வர்யா தத்தா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன் போன்ற மூன்று கதாநாயகிகள் நடித்து வருகின்றனர். இவர்கள் மட்டுமில்லாமல் யோகி பாபு, கிங்க்ஸ்லி, டிடி போன்ற பலரும் நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

தற்போது இந்த படத்தின் புது பாடல் ஒன்றின் ப்ரோமோ வெளியாகி உள்ளது. இந்த படத்தில் யுவன் ஷங்கர் ராஜாவுடன் இணைந்து ஹிப் ஹாப் ஆதியுடன் தியாகி பாய்ஸ் என்ற பாடல் வெளியாகியுள்ளது. யுவன் ஷங்கர் ராஜாவும், ஆதியும் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. செம்ம கூலாக இருக்கும் அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below video…
Youtube video code embed credits: U1 Records.