ஒலிம்பியாட் வரவேற்பு பாடலில் அதிதியை தேர்வு செய்த‌து ஏன்? உண்மையை சொன்ன விக்னேஷ் சிவன்

செஸ் ஒலிம்பியாட் வரவேற்பு பாடலில் நடிகர் சங்கரின் மகள் அதிதியை தேர்வு செய்தது ஏன் என்று இயக்குனர் விக்னேஷ் சிவன் தனியார் தொலைக்காட்சிக்கு விளக்கம் அளித்துள்ளார். செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் கடந்த ஜீலை 28ம் தேதி சென்னையில் மிகப்பிரம்மாண்டமாக தொடங்கி நடைபெற்றது. இதில் தமிழர்களின் கலைகளையும், இலக்கிய வளங்களையும், பெருமைகளையும் பறை சாற்றும் வண்ணம் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இந்த நிலையில் துவக்க விழாவை ஒருங்கிணைத்த, இயக்கிய விக்னேஷ் சிவன் மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஏற்கனவே என்ஜாயி எஞ்சாமி பாடலை பாடிய அறிவு ஏன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்று நெட்டிசன்கள் விக்னேஷ் சிவனை வறுத்தெடுத்து வந்தனர். இந்த நிலையில் மீண்டும் இன்னொரு பிரச்சினை கிளம்பி இருக்கிறது. இதற்கு விளக்கம் அளித்து விக்னேஷ் சிவன் ஒரு பேட்டியில் பேசி உள்ளது தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

ஒலிம்பியாட் வரவேற்பு பாடலில் அதிதியை தேர்வு செய்த‌து ஏன்? உண்மையை சொன்ன விக்னேஷ் சிவன் 1

விளம்பரம்

ஒலிம்பியாட் நிகழ்ச்சிகளுக்காக ஒரு வரவேற்பு பாடல் தயார் செய்யப்பட்டது. இந்த வரவேற்பு பாடலையும் விக்னேஷ் சிவனே இயக்கியிருந்தா.ர் இதில் முதலமைச்சர் கூட நடித்திருப்பார். முதலமைச்சர் மட்டும் இல்லாது ஏ.ஆர் ரகுமான், இயக்குனர் சங்கரின் மகள் அதிதி ஆகியோர் இந்த பாடலில் தோன்றி நடித்திருந்தனர். அதில் அதிதி புதுமுக கதாநாயகி ஆவார். அவர் சமீபத்தில் விரும்பன் படத்தில் நடித்து முடித்துள்ளார். விருமன் படம் வெளியாவதற்கு முன்பாகவே, சிவகார்த்திகேயனுடன் அடுத்த படத்தில் இணைந்துள்ளார். மேலும் செஸ் ஒலிம்பியாட் துவக்க நிகழ்ச்சியிலும் நடனமாடி இருக்கிறார் இதை பார்த்த பலரும் அதிதியை பார்த்து, சங்கரின் மகள் என்பதாலேயே இவருக்கு இவ்வளவு முக்கியத்துவம் தருவதாக குற்றச்சாட்டு கூறினர். நடிகை ஆத்மிகா கூட பலர் ஈசியாக ஏணியில் ஏறி நடிக்க வந்து விடுகிறார்கள் என்று பதிவிட்டு இருந்தார். இது அதிதியைத்தான் குறிப்பிடுகிறார் என்று பலரும் கூறி வந்தனர்.

தொடர்புடையவை  பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்கள் பற்றி தெரிஞ்சிக்கணுமா? அப்போ இத படிங்க.!

ஒலிம்பியாட் வரவேற்பு பாடலில் அதிதியை தேர்வு செய்த‌து ஏன்? உண்மையை சொன்ன விக்னேஷ் சிவன் 3

விளம்பரம்

இந்த விமர்சனங்களுக்கு எல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக இயக்குனர் விக்னேஷ் சிவன் தற்போது பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார். அதில் அவர் இது தமிழரின் கலாச்சாரத்தை எடுத்துக் கூறக்கூடிய ஒரு நிகழ்ச்சி என்பதால் ஒரு தமிழ் முகம் தேவைப்பட்டது அதனாலேயே அதிதியை அழைத்தோம். இந்த விஷயம் இயக்குனர் சங்கர் அவர்களுக்கு கூட தெரியாது, இன்னும் சொல்லப்போனால் நாங்கள் சங்கரிடம் இது குறித்து பேசக்கூட இல்லை, மேலும் அதிதி ஒரு நல்ல நடன கலைஞர், அவர் சிறப்பாக நடனமாடுவார். எனவே அவர் இந்த பாடலில் நடனம் ஆடினால் நன்றாக இருக்கும் என்று எண்ணியும், ஒரு தமிழ் முகம் இதில் தோன்ற வேண்டும், தமிழரின் முகத்தை பிரதிபலிக்க வேண்டும் என்ற காரணத்தினாலேயே அவரை தொடக்க விழா வரவேற்பு பாடலில் ஆட வைத்ததாக விக்னேஷ் சிவன் விளக்கம் அளித்துள்ளார். செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா நிகழ்ச்சியிலிருந்து பல சர்ச்சைகளில் விக்னேஷ் சிவன் சிக்கி வருகிறார். அவர மீது குற்றச்சாட்டுகளை நெட்டிசன்கள் தொடர்ந்து முன் வைத்து வருவது குறிப்பிடத்தக்கது. அவரின் பேட்டியை நீங்களும் காண.. Watch the below video..

விளம்பரம்

Youtube video code embed credits: Thanthi Tv

விளம்பரம்

Leave a Comment