மீனாவை ஒரு தலையாக காதலித்தாரா திருமா? திருமணம் பற்றி உண்மைகளை போட்டு உடைத்த திருமா

நடிகை மீனாவுடன் ஏற்பட்ட காதல் தோல்வியால்தான் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்ற கேள்விக்கு தற்போது அவரே விளக்கமளித்திருக்கிறார். தமிழகத்தில் உள்ள மிக முக்கியமான கட்சிகளில் ஒன்று தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி. இதன் தலைவர் தொல். திருமாவளவன் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றி வருகிறார். பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பு, பின்னாளில் அரசியலில் ஈடுபட்டு தேர்தல் கட்சியாக மாறியது. இதன் தலைவராக தொல் திருமாவளவன் பல வருடங்களாக நீடித்து வருகிறார். இவர் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் தனது ஆரம்ப கால வாழ்க்கை குறித்தும், கல்லூரி முடித்த பின்பு வேலைக்காக பல இடங்களில் கஷ்டப்பட்டது குறித்தும் பேசிக் கொண்டிருந்தார், அப்போது அவரது திருமணம் குறித்த பேச்சு எழுந்தது. சமீபத்தில்தான் அவர் தனது 60-வது பிறந்தநாளை கொண்டாடினார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மீனாவை ஒரு தலையாக காதலித்தாரா திருமா? திருமணம் பற்றி உண்மைகளை போட்டு உடைத்த திருமா 1

விளம்பரம்

அதை மேற்கோள் காட்டி கேள்வி எழுப்பிய நெறியாளர், 60 வயது ஆகிவிட்டது. இன்னும் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை. தற்போது கூட ஒன்றும் குறைந்து விடவில்லை. திருமணம் செய்து கொள்ளலாமே என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த திருமாவளவன் என்னிடம் நிறைய பேர் இதைச் சொன்னார்கள். எனது தாயார் இன்றுவரை இந்த கருத்தைச் சொல்லி அழுது கொண்டே தான் இருக்கிறார். எனது தந்தை இறக்கும் தருவாயில், மரணப் படுக்கையில் படுத்திருந்தார். அப்போது தொலைவில் நின்றிருந்த என்னை அழைத்து, அவரின் உடலில் உள்ள சக்தியெல்லாம் திரட்டி திருமணம் செய்து கொள் தம்பி என்று கூறினார். ஆனால் என்னால் திருமணம் செய்து கொள்ள இயலவில்லை. அது இன்றுவரை என் மனதை உறுத்திக் கொண்டே இருக்கிறது என்று பேசினார். திருமாவின் 60வது பிறந்தநாள் விழாவில் பேசிய முதலமைச்சர் கூட 30 வருடங்களுக்கு முன்பு நானும் திருமாவும் இப்படி நெருக்கமாக இருந்திருந்தால், நானே அவருக்கு பெண் பார்த்து திருமணம் செய்து வைத்திருப்பேன் என்று பேசியிருந்தார்.

தொடர்புடையவை  நான் சினிமாவை விட்டு போறேன்..எனக்கு வேற வழி தெரியல..பிரபல தமிழ் நடிகர் அறிவிப்பு | Siddharth

மீனாவை ஒரு தலையாக காதலித்தாரா திருமா? திருமணம் பற்றி உண்மைகளை போட்டு உடைத்த திருமா 3

விளம்பரம்

 

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்கள் பலமுறை திருமாவளவனிடம் திருமணம் செய்து கொள்ள வலியுறுத்தியும் அவர் பேச்சை கேட்காமல் திருமா இருந்து விட்டதாகவும் முதலமைச்சர் பேசியிருந்தார். இந்த நிலையில் திருமாவளவன் நடிகை மீனாவை ஒருதலையாக காதலித்தார் என்றும், அந்த காதல் கை கூடாததால் தான் அவர் திருமணமே செய்து கொள்ளவில்லை என்றும் ஒரு புரளி பரவி இருந்தது. அதை நெறியாளர் அவரிடமே நேராக கேட்டதற்கு, அவர் அந்த கருத்தை முற்றிலுமாக மறுத்தார். மீனாவை நேரில் சந்தித்தது கூட இல்லை, அவருடைய ஒரே ஒரு படம் மட்டுமே பார்த்திருக்கிறேன். அதுவும் அந்த தஞ்சாவூரு மண்ணு எடுத்து பாடல் மட்டுமே நன்றாக இருந்தது. அதை மட்டுமே நான் பார்த்து இருக்கிறேன். அவரை ஒரு முறை கூட நேரில் சந்தித்தது கிடையாது. நான் அவரை காதலித்ததாக கிளம்பிய வதந்தி முற்றிலும் பொய் என்று திருமாவளவன் அதை மறுத்து பேசி இருந்தார்.

விளம்பரம்

மீனாவை ஒரு தலையாக காதலித்தாரா திருமா? திருமணம் பற்றி உண்மைகளை போட்டு உடைத்த திருமா 5

மீனாவை பொருத்தவரை குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பல படங்களில் நடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பல மொழிகளிலும் நடித்து வருகிறார். இவருடைய கணவர் சமீபத்தில் நுரையீரல் பிரச்சினை காரணமாக உயிரிழந்திருந்தார் இந்த நிலையில் ஒரு கட்சியின் தலைவரை, கணவரை இழந்த பெண் ஒருவருடன் இணைத்து வைத்து பேசுவது தவறு என்றும் அந்த நெறியாளருக்கு பலரும் தங்களது கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர். அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below Video..

விளம்பரம்

YouTube Video Code Embed Credits: Sathiyam News

விளம்பரம்
விளம்பரம்

1 thought on “மீனாவை ஒரு தலையாக காதலித்தாரா திருமா? திருமணம் பற்றி உண்மைகளை போட்டு உடைத்த திருமா”

  1. இப்போ மீனா ஃபிரியா தானே இருக்கிறார். முயற்சி பண்றது ஒன்னும் தப்பு இல்லையே.
    .

    Reply

Leave a Comment