விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் புகழ். இவர் கடலூரைச் சேர்ந்தவர். திரைத்துறையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று சென்னைக்கு கிளம்பி வந்தார். ஆனால் இங்கு வந்து அவர் ஆரம்பத்தில் முடிவெட்ட கூட காசு இல்லாமல் இருந்துள்ளார். அதனால் அவருக்கு முடி பரட்டையாக மாறியிருக்கிறது. பின்னர் இதுவே இவருக்கு பெயர் ஆகிப்போனது. இவரை பரட்டை புகழ் என்று சொன்னால்தான் பலருக்கும் தெரியும். ஆரம்பத்தில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் பெண் வேடங்களை மட்டும் இவர் ஏற்று நடித்திருந்தார். இதனால் இவரை பலரும் கேலிக்குள்ளாக்கினார். ஆனால் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாத புகழ், தொடர்ந்து காமெடி நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து வந்தார்.

பின்னர் இவருக்கு குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம் பலரையும் சிரிக்க வைத்தார் புகழ். இவரின் உடல் மொழி மற்றும் கவுண்ட்டர் காமெடி அடிக்கும் திறமை போன்றவற்றால் பலரும் இவரை ரசிக்க ஆரம்பித்தனர். தற்போது இவர் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். அஜீத்துடன் வலிமை படத்தில், சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன், அருண் விஜயின் யானை படத்திலும் நடித்து முடித்துள்ளார். மேலும் இவர் ஹீரோவாக ஜூ கீப்பர் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும் அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் புகழ் இதனால் குக் வித் கோமாளி சீசன் 3ல் அவ்வப்போது தலை காட்டி மட்டுமே வந்தார்.

இந்த நிலையில் தான் ஒரு பெண்ணை ஆறு வருடங்களாக காதலித்து வருவதாக புகழ் சமீபத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அறிவித்திருந்தார். அதைத்தொடர்ந்து அவர் தனது காதலியுடன் இருக்கும் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி வந்தன. இந்த நிலையில் இருவரும் திருமணத்திற்கு முன் எடுக்கும் ப்ரீ வெட்டிங் போட்டோஷூட் நடத்தினர். அந்தப் பெண் பென்சிக்கும் புகழுக்கும் செப்டம்பர் 5ஆம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது. அதற்கான அழைப்புகள் இணையதளத்தில் வைரலாகி இருக்கிறது. கூட்டத்தை தவிர்ப்பதற்காக திருமணம் நடக்கும் இடத்தை மட்டும் அழித்துவிட்டு பத்திரிக்கையை வெளியிட்டுள்ளனர் புகழ் பென்சி தம்பதிகள்.
