பென்சியை இஸ்லாமிய முறைப்படி 3வது முறையாக திருமணம் செய்த புகழ்

விஜய் டிவியில் தனது வாழ்க்கையை தொடங்கி வெற்றிகரமாக இருக்கும் ஒரு நபர்தான் புகழ். இவருக்கும் பென்சி என்பவருக்கும் இரண்டு நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. புகழும் பென்சியும் கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வருகின்றனர். இந்த நிலையில் இவர்களது திருமணம், திண்டிவனம் அருகே உள்ள தீவனூர் பொய்யாமொழி விநாயகர் ஆலயத்தில் மிக எளிமையான முறையில் நடைபெற்று இருந்தது. இந்த திருமணத்திற்கு தனது நண்பர்கள் யாரையும் அழைக்காமல் குடும்பத்தினரை மட்டுமே வைத்து எளிய முறையில் திருமணத்தை நடத்தி இருந்தார் புகழ். சினிமா மற்றும் சின்னத்திரை நண்பர்களுக்காக திருமண வரவேற்பை மகாபலிபுரத்தில் நாளை நடத்த இருக்கிறார். இந்த நிலையில் புகழ் தற்போது தன் திருமணம் குறித்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஒரு பதிவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

பென்சியை இஸ்லாமிய முறைப்படி 3வது முறையாக திருமணம் செய்த புகழ் 1

விளம்பரம்

 

புகழும் பென்சியும் ஓராண்டுக்கு முன்பே கோயமுத்தூரில் உள்ள பெரியார் திராவிட கழக திடலில் வைத்து சுயமரியாதை திருமணம் செய்து பதிவு செய்துள்ளனர். அந்த புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி வைரலாகி இருந்தது. இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பாக கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டிருந்தனர். இந்த செய்தியை பார்த்த பலரும் ஒரு புறம் சுயமரியாதை திருமணம், மற்றொரு புறம் கோவிலில் வைத்து திருமணமா? என்று விமர்சிக்க தொடங்கினர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தற்போது புகழ் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து விளக்கம் அளித்து இருக்கிறார். அந்த புகைப்படத்தில் பென்சியை இஸ்லாமிய முறைப்படி ஒரு முறை திருமணம் செய்து அதில் ஒரு கருத்தையும் அவர் கூறி இருக்கிறார்.

விளம்பரம்
தொடர்புடையவை  பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இருந்து விலகிய கண்ணன்..? இனி இவருக்கு பதில் இவரா.?

பென்சியை இஸ்லாமிய முறைப்படி 3வது முறையாக திருமணம் செய்த புகழ் 3

 

விளம்பரம்

பென்சி இஸ்லாமியர் என்பதால் இஸ்லாமிய முறைப்படி தற்போது அந்த திருமணத்தையும் அவர் முடித்திருக்கிறார். அவர் கூறும் பொழுது என் தந்தை அன்பிற்கு ஒருமுறை, என் தாய் அன்பிற்கு ஒரு முறை, என் மனைவி குடும்பத்தார் அன்பிற்கு ஒருமுறை, வேறு அன்பு உள்ளங்கள் ஆசைப்பட்டால் மேலும் ஒருமுறை தயார். இந்தியனாக இருக்கிறேன் எல்லா புகழும் இறைவனுக்கே என்று பதிவிட்டுள்ளார். தந்தைக்காக சுயமரியாதை திருமணமும் தாயின் ஆசைக்காக கோவிலில் வைத்து திருமணமும், தனது மனைவியின் மதத்திற்காக இஸ்லாமிய முறைப்படி ஒரு முறை திருமணமும் செய்திருப்பதாக விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் புகழ். அந்த வீடியோவை நீங்களும் காண…Watch the below video..

விளம்பரம்

YouTube video Code Embed Credits: Star Bytes

விளம்பரம்

Leave a Comment