பிக்பாஸ்ஸின் முதல் ப்ரோமோ.. இந்த முறையும் ஆண்டவர் தான்.! போட்றா வெடிய..!

விஜய் பிக் பாஸ் சீசன் 6 விரைவில் தொடங்க உள்ளது. அதற்கான ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. ரியாலிட்டி ஷோக்களை ஒளிபரப்புவதில் முதலிடத்தில் வகிக்கிறது விஜய் டிவி. இதில் ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சி தான் பிக்பாஸ். நூறு நாட்கள் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில் ஒருவருக்கொருவர் முன்பின் அறிமுகம் இல்லாதவர்களை ஒரு வீட்டிற்குள் அடைத்து வைத்திருப்பார். இவர்களுக்கு பொழுதுபோக்கு அம்சங்களான டிவி, செல்போன் என எதுவும் இருக்காது. அவ்வப்போது விளையாட்டுகளை விளையாடி அதன் மூலம் கிடைக்கும் புள்ளிகளை பயன்படுத்தி, இவர்கள் உணவு சேகரித்து சாப்பிட முடியும். அப்படியான ஒரு விளையாட்டு தான் பிக்பாஸ் நிகழ்ச்சி. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பிக்பாஸ்ஸின் முதல் ப்ரோமோ.. இந்த முறையும் ஆண்டவர் தான்.! போட்றா வெடிய..! 1

விளம்பரம்

இது வெளிநாடுகளில் ஒளிபரப்பாகும் பிக் பிரதர் என்ற நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு, இந்த நிகழ்ச்சியை விஜய் டிவி ஒளிபரப்பு வந்தது. இது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் ஒளிபரப்பப்படுகிறது. மற்ற மொழிகளை விட தமிழில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ்க்கு ரசிகர்கள் அதிகம். இது மொத்தம் ஐந்து சீசன்களை நடத்தி முடித்துள்ளது. இந்த ஐந்து சீசன்களையுமே கமலஹாசன் தான் தொகுத்து வழங்கி வந்தார். தற்போது 6வது சீசனுக்கான எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிந்த பிறகு பிக்பாஸ் ஒளிபரப்பாக கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. தற்போது குக் வித் கோமாளி மற்றும் பிபி ஜோடிகள் என அனைத்து நிகழ்ச்சிகளும் முடிவடைந்துள்ளன. எனவே அக்டோபர் 2ம் தேதி பிக்பாஸ் ஆரம்பிக்கப்படலாம் என்ற தகவலும் பரவி வருகிறது.

தொடர்புடையவை  இன்னும் எவ்வளவு நாளைக்கு மேல் சாதி கீழ் சாதினு படம் எடுப்பீங்க? சரமாரியாக கேள்வி கேட்ட ப்ளூ சட்டை

பிக்பாஸ்ஸின் முதல் ப்ரோமோ.. இந்த முறையும் ஆண்டவர் தான்.! போட்றா வெடிய..! 3

விளம்பரம்

இதில் ரக்‌ஷன், தர்ஷா குப்தா, டிடி, சின்னத்திரை நடிகை ஸ்ரீநிதி, காவ்யா, ரோஷ்ணி போன்ற பலரின் பெயர் அடிபடுகிறது. யார் யார் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த சீசன் 6ன் முதல் ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. இந்த சீசனையும் கமலஹாசனே தொகுத்து வழங்க உள்ளது உறுதியாகியுள்ளது. நீங்களும் அந்த ப்ரோமோவை காண.. Watch the below video..

விளம்பரம்

YouTube Video Code Embed Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment