குக் வித் கோமாளி பிரபலம் ரக்ஷன் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் தற்போது வெளியாகியிருக்கிறது. இந்த புகைப்படங்களை கலக்கப்போவது யாரு தீனா தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு?, குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளை பல வருடங்களாக தொகுத்து வழங்கி வருபவர் வி.ஜே ரக்ஷன். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்குப் பிறகு இவருக்கு ரசிகர் பட்டாளம் பெருகியது. கோமாளிகளுடன் இணைந்து இவர் அடிக்கும் லூட்டியையும் ரசிக்க பெரிய கூட்டமே இருக்கிறது. இதில் கிடைத்த புகழால் இவருக்கு 2019 ஆம் ஆண்டு துல்கர் சல்மான் உடன் இணைந்து கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
தொடர்ந்து ரரக்ஷன் ஹீரோவான நடிக்கும் ஆனி படத்தின் அறிவிப்பு வெளியானது. இந்த படத்தினை ஃபிலியா என்டெர்மென்ட் என்ற நிறுவனமும், குவியம் மீடியா ஒர்க்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர். இந்த படத்தை யோகேந்திரன் என்பவர் இயக்குகிறார். சச்சின் வாரியர் படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் பாடல்கள் அனைத்தையும் கவிஞர் தாமரை எழுத, கோபி துரைசாமி ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படம் இந்த படத்தில் ரக்ஷன் உடன் இணைந்து கலக்கப்போவது யாரு தீனா, விஷகா திமான், பிராங்ஸ்டார் ராகுல் ஆகியோர் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து இருப்பதாக கலக்கப்போவது யாரு தீனா தனது instagram பக்கத்தில் அறிவித்துள்ளார். முதல் கட்ட படப்பிடிப்புகள் கன்னியாகுமரியில் நடைபெற்று இருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். மேலும் தேங்க்யூ மை லவ் ரக்ஷன் என்று ரக்ஷனுக்கு தன்னுடைய நன்றியையும் அவர் தெரிவித்திருக்கிறார்.
View this post on Instagram