சிவகாமியை நிற்க வைத்து நாக்கை புடுங்கி கொள்வது போல் கேள்வி கேட்ட சந்தியா..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியல் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப் ஹிட் தொடர்களில் ஒன்றுதான் ராஜாராணி 2. இந்த தொடரில் ஹீரோயினாக ரியா விஸ்வநாதனும், ஹீரோவாக நடிகர் சித்துவும் நடித்து வருகின்றனர். போலீஸ் உயர் அதிகாரி ஆக வேண்டும் என்ற கனவை தனது மாமியாரின் தடைகளை மீறி எப்படி கதாநாயகி நிறைவேற்றுகிறார் என்பது குறித்த கதை தான் ராஜா ராணி2. இது ஹிந்தி சீரியலின் தமிழ் ரீமேக்கான ‘என் கணவன் என் தோழன்’ கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது. இந்தத் தொடரில் அடிக்கடி பல்வேறு திருப்பங்கள் நடைபெற்று வருகிறது. ஹீரோ சரவணனின் தம்பி ஆதி, கிறிஸ்துவ பெண்ணான ஜெஸியை காதலிக்கிறார். பின்னர் இருவருக்குள்ளும் நெருக்கம் அதிகமாகி ஜெஸ்ஸி கர்ப்பமாகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சிவகாமியை நிற்க வைத்து நாக்கை புடுங்கி கொள்வது போல் கேள்வி கேட்ட சந்தியா.. 1

விளம்பரம்

ஜெஸி கிறிஸ்துவர் என்பதால் ஆதியின் தாயாரும் பாட்டியும் அவரை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். ஜெஸி மதம் மாறி விட்டு வந்தால் அவரை ஏற்றுக் கொள்ளலாம் என்று ஆதியின் தாயார் சிவகாமி சொல்கிறார். ஆனால் தான் அவ்வாறு மதம் மாற முடியாது என்று ஜெஸி முழுமையாக மறுத்து விடுகிறார். மேலும் ஜெசியின் பெற்றோர்கள், ஜெசி வயிற்றில் வளரும் குழந்தை கடவுள் கொடுத்தது அதை கலைக்க எங்களுக்கு மனமில்லை என்று கூறுகின்றனர். இந்த நிலையில் ஆதி ஜெசி திருமணம் நடைபெறுமா? என்று பலரும் யோசித்துக் கொண்டிருந்த நிலையில், திடீர் திருப்பமாக ஹீரோ சரவணனின் தந்தை ஒரு விபத்தில் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். ஆபத்தான கட்டத்தில் இருக்கும் அவருக்கு உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று மருத்துவர் கூறுகிறார்.

தொடர்புடையவை  மகனின் 5-வது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடிய ராதிகா மகள் ரயான்! அழகிய புகைப்படங்கள்.!

சிவகாமியை நிற்க வைத்து நாக்கை புடுங்கி கொள்வது போல் கேள்வி கேட்ட சந்தியா.. 3

விளம்பரம்

அப்போது ஏபி நெகட்டிவ் வகை ரத்தம் தான் வேண்டும் என்று குடும்பத்தாரிடம் மருத்துவர் கூற, அது மிகவும் அரிதான ரத்த வகை யாரிடமாவது இருந்தால் அழைத்து வாருங்கள் அவர்களது காலை பிடித்து நான் என் கணவரை காப்பாற்றுகிறேன் என்று சிவகாமி கதறி அழுகிறார். அப்போது சந்தியா ஜெசி இரத்த வகை ஏ பி நெகடிவ் தான் என்று கூறுகிறார். ஜெஸியை அழைத்து வந்து சிவகாமியின் கணவருக்கு ரத்தம் ஏற்றப்படுகிறது. அதை பார்த்த சந்தியா ஜெசி ரத்தம் கொடுக்கும்போது உங்களுக்கு மதம் தெரியவில்லை? ஆனால் திருமணம் என்று வந்தால் மட்டும் உங்களுக்கு மதம் கண்ணுக்கு தெரிகிறதா? என்று நிற்க வைத்து கேள்வி கேட்கிறார் தெரியாத உள்ள அந்த ப்ரோமோவை நீங்களும் காண… Watch the below video..

விளம்பரம்

YouTube Video Code Embed Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment