கோபியின் திருமணம் என தெரியாமல் சமையல் ஆர்டர் எடுத்த பாக்கியா..! இந்த வார ப்ரோமோ

பாக்கியலட்சுமி தொடர் அடுத்த உச்சகட்ட பரபரப்பை எட்டி இருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடர் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த தொடரில் பாக்யா தனது கணவரின் கள்ளக்காதலை கண்டுபிடித்து அவரை வீட்டை விட்டே வெளியே அனுப்பி விடுகிறார். இதனால் அவரது மூத்த மகன் செழியன், மாமியார் ஈஸ்வரி, மகள் இனியா என யாரும் அவரிடம் பேசுவதில்லை. ஆனால் பாக்யாவிற்கு ஆதரவாக அவரது மருமகள் ஜெனி, இளைய மகன் எழில், மாமனார், சமையல்காரப் பெண் செல்வி ஆகியோர் ஆதரவாக இருந்து வருகின்றனர். தற்போதைய கதைப்படி கணவர் கோபி இல்லாமல் பணத்திற்கு மிகவும் கஷ்டப்படுகிறார் பாக்கியா. இனியாவிற்கு ஸ்கூல் பீஸ் கட்டுவதற்கு கூட காசு இல்லை, வீட்டின் இபி பில் கட்டுவதற்கு கூட பாக்கியவிடம் காசு இல்லை. எனவே அவர் ஒரு திருமண மண்டபத்தில் சமையல் ஆர்டர் எடுத்து சமைப்பதற்காக இன்டர்வியூவிற்கு செல்கிறார். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

கோபியின் திருமணம் என தெரியாமல் சமையல் ஆர்டர் எடுத்த பாக்கியா..! இந்த வார ப்ரோமோ 1

விளம்பரம்

இன்டர்வியூக்கு சென்ற அவர் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகிறார். அங்கு இருந்தவர்கள் அனைவருமே மிகப்பெரிய சமையல் ஆர்டர் செய்யும் கேட்டரிங் சர்வீஸ் வைத்திருப்பவர்கள். ஆனால் அங்கு ஒரு சின்ன போட்டி ஒன்று வைக்கப்பட்டது. 15 நிமிடங்களில் சிறப்பாக சமையல் செய்யும் ஒருவருக்கு தான் அந்த சமையல் காண்ட்ராக்ட் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. பாக்யாவும் 15 நிமிடத்தில் ஒரு உணவை சமைத்து அசைத்து விடுகிறார். இதனால் பாக்யாவிற்கு ஒரு கான்ட்ராக்ட் கொடுக்க அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. தற்போது வெளியாகி உள்ள ப்ரோமோவின் படி திருமண மண்டபத்திற்கு சமையல் ஆர்டர் எடுக்க வந்த பாக்கியாவிற்கு, அதே திருமண மண்டபத்தைச் சேர்ந்த ஒரு சிறிய பார்ட்டி ஹாலில் சமைப்பதற்கான வாய்ப்பை அந்த நிறுவனம் வழங்குகிறது. இதை அவர் மிக மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு வீட்டிற்கு திரும்புகிறார்.

தொடர்புடையவை  என் புள்ளை உயிரோட தான் இருக்கா..! சுடர் தன் மகள் என்பதை தெரிந்து கொள்ளும் வெற்றி.!

கோபியின் திருமணம் என தெரியாமல் சமையல் ஆர்டர் எடுத்த பாக்கியா..! இந்த வார ப்ரோமோ 3

விளம்பரம்

இது ஒரு புறம் இருக்க கோபிக்கும் ராதிகாவிற்கும் திருமணம் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. கோபியும் ராதிகாவின் அண்ணனும் பாக்கியாவிற்கு வேலை கிடைத்த அதே, திருமண மண்டபத்தில் இருக்கும் பார்ட்டி காலில் வைத்து திருமணம் செய்து கொள்ள ஏற்பாடு செய்துள்ளனர். உடனே அந்த திருமண மண்டபத்தின் உரிமையாளர் பாக்கியாவை அழைத்து பார்ட்டி ஹாலில் ஒரு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது, அதற்கு நீங்கள் தான் சமைக்க வேண்டும் என்று கூறுகிறார். உடனே பாக்யா ஜெனி மற்றும் செல்வியிடம் நமக்கு முதல் ஆர்டர் கிடைத்துவிட்டது என்று சந்தோசமாக கூறிவிட்டு அந்த திருமண மண்டபத்தின் உரிமையாளரை சந்தித்து முதல் ஆர்டரின் பணத்தையும் பெற்றுக் கொள்கிறார். தான் கோபியின் இரண்டாவது திருமணத்திற்கு தான் சமைக்க போகிறோம் என்பது தெரியாமல் பாக்யாவும் அந்த ஆர்டரை பெற்றிருக்கிறார். அந்த ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. நீங்களும் அந்த ப்ரோமாவை காண.. Watch the below video..

விளம்பரம்

YouTube Video Code Embed Credits: Vijay Television

விளம்பரம்

Leave a Comment