சினிமாவிற்கு வருவதற்கு முன்பு ப்ரியங்கா அருள் மோகன் எப்படி இருந்து இருக்கார்னு பாருங்க..!

பிரியங்கா அருள் மோகனின் பழைய புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி வைரலாகி இருக்கிறது. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் பிரியங்கா அருள் மோகன். சென்னையில் பிறந்து வளர்ந்த இவரின் தாய் கர்நாடகாவைச் சேர்ந்தவர், தந்தை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். எனவே இவருக்கு தமிழ், கன்னடம் என இரண்டு மொழிகளும் சரளம். சென்னையில் இன்ஜினியரிங் படிப்பை முடித்த இவர், திரைத்துறையில் இருக்கும் ஆர்வத்தின் காரணமாக படங்களில் நடித்த தொடங்கினார். 2019 ஆம் ஆண்டு வெளியான ‘ஒந்து கதே ஹெல்லா’ என்ற கன்னட படத்தின் மூலமாக திரைத்துறையில் அறிமுகமானார். பின்பு தெலுங்கில் நானியுடன் கேங் லீடர் என்ற படத்தில் நடித்தார். பின்னர் தமிழில் நெல்சன் திலிப் குமார் இயக்கிய டாக்டர் படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

சினிமாவிற்கு வருவதற்கு முன்பு ப்ரியங்கா அருள் மோகன் எப்படி இருந்து இருக்கார்னு பாருங்க..! 1

விளம்பரம்

இவரது முதல் படத்திலேயே இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவானது. இந்த படம் 100 கோடிக்கும் அதிகமான வசூலை பெற்றது. இந்த படத்தின் வரும் பாடல்கள் அனைத்துமே வேற லெவலில் ஹிட் அடிக்க, பிரியங்கா அருள் மோகனுக்கும் பெரிய அளவில் புகழ் கிடைத்தது. பின்னர் இவர் சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணைந்து ‘டான்’ படத்தில் நடித்தார். இந்த படமும் 100 கோடி வசூலை எட்டியது. அதற்கு அடுத்தபடியாக இவர் தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யாவுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை பெற்றார். சூர்யாவுக்கு ஜோடியாக எதற்கும் துணிந்தவன் படத்தில் ஹீரோயினாக நடித்தார்.

தொடர்புடையவை  KGF 3 எப்போன்னு தெரியுமா? ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தயாரிப்பாளர் | KGF

சினிமாவிற்கு வருவதற்கு முன்பு ப்ரியங்கா அருள் மோகன் எப்படி இருந்து இருக்கார்னு பாருங்க..! 3

விளம்பரம்

இவரின் பழைய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகிய வைரலாகி இருக்கிறது. அதை பகிர்ந்து வரும் பிரியங்கா அருள் மோகனின் ரசிகர்கள் இது நம்ம பிரியங்காவா? என்று கமெண்டில் கேள்வி எழுப்பி வருகின்றனர். தற்போது மெழுகு சிலை போல் இருக்கும் அவர், அந்த அளவிற்கு அடையாளமே தெரியாமல் இருந்திருக்கிறார்.

சினிமாவிற்கு வருவதற்கு முன்பு ப்ரியங்கா அருள் மோகன் எப்படி இருந்து இருக்கார்னு பாருங்க..! 5

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment