மாமியாருக்கு முத்தமிட்டு வாழ்த்துக்களை கூறிய விக்னேஷ் சிவன்.. தீயாய் பரவும் புகைப்படம்..!

நயன்தாராவின் தாயாருக்கு முத்தமிட்டு தனது பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்து இருக்கிறார் விக்னேஷ் சிவன் இந்த படம் தற்போது சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது தமிழில் போடா போடி என்ற படத்தை இயக்கியதன் மூலமாக திரையுலகில் அடி எடுத்து வைத்தவர் இயக்குனர் விக்னேஷ் சிவன், பின்னர் இவர் நானும் ரவுடிதான் காத்து வாக்குல ரெண்டு காதல் போன்ற வெற்றி படங்களை இயக்கியிருக்கிறார் இவருக்கும் நயன்தாராவுக்கும் கடந்த ஜூன் மாதம் சென்னையில் மகாபலிபுரத்தில் உள்ள ஒரு தனியார் சேட்டில் வைத்து மிகப் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது திருமணத்தில் தமிழ் திரையுலகினர் பலரும் கலந்து கொண்டிருந்தனர். நயன்தாராவை பொறுத்தவரை அவர் கேரளாவில் பிறந்து வளர்ந்தவர் சிறிய தொலைக்காட்சியில் தொகுப்பாளனியாக தனது வாழ்க்கை ஆரம்பித்து பின்னர் திரையுலகில் அடி எடுத்து வைத்தவர்.

மாமியாருக்கு முத்தமிட்டு வாழ்த்துக்களை கூறிய விக்னேஷ் சிவன்.. தீயாய் பரவும் புகைப்படம்..! 1

விளம்பரம்

 

2005 ஆம் ஆண்டு வெளியான ஐயா படத்தின் மூலமாக தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார் அன்று தொடங்கி இன்று வரை அவர் சுமார் 75க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார் மேலும் லேடி சூப்பர் ஸ்டார் ஆகவும் வளம் வந்து கொண்டிருக்கிறார் நானும் ரவுடிதான் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோதே இவருக்கும் இயக்குனர் விக்னேஷ் இவனுக்கும் காதல் மலர்ந்தது இருவரும் ஏழு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர் திருமணத்திற்கு பின்னர் நயன்தாரா தனது முதல் ஹிந்தி படமான ஜபான் படத்தில் நடித்த சென்றுவிட்டார் விக்னேஷ் சிவன் செஸ் ஒலிம்பியாட் போட்டியை இயக்குவதில் பிஸியாகிவிட்டார் பின்னர் இருவரும் சற்று படங்கள் நடிப்பதில் இருந்து விலகி ஸ்பெயினுக்கு டூருக்கு சென்று வந்தனர்.

விளம்பரம்
தொடர்புடையவை  வெளுத்து வாங்க வந்த விஜய் சேதுபதி..! உச்சகட்ட பயத்தில் போட்டியாளர்கள்..! Bigg Boss Promo…!

மாமியாருக்கு முத்தமிட்டு வாழ்த்துக்களை கூறிய விக்னேஷ் சிவன்.. தீயாய் பரவும் புகைப்படம்..! 3

அங்கிருந்து அவ்வப்போது தனது காதல் மனைவியை புகைப்படம் எடுத்து வீடியோ எடுத்தும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி வந்தார் விக்னேஷ் சிவன், விக்னேஷ் சிவன் நயன்தாரா திருமணத்திற்கு நயன்தாராவின் தாயாரால் வர இயலவில்லை அவருக்கு உடல்நலம் சரியில்லாததால் அவர் வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார் இதனால் திருமணம் முடிந்த கையோடு நேராக தனது தாயார் வீட்டிற்கு சென்றிருந்தார் நயன்தாரா இப்போது நயன்தாராவை பார்ப்பதற்காக சென்னைக்கு வந்துள்ளார் நயன்தாராவின் தாயார் ஓமன குரியன் அவருக்கு இன்று பிறந்தநாள் தன்னுடைய மாமியாரின் நெற்றியில் முத்தமிட்டு அந்தப் புகைப்படத்தை வெளியிட்டு ஓமணக் குரியனுக்கு விக்னேஷ் சிவன் பிறந்தநாள் வாழ்த்து கூறியிருக்கிறார்.

விளம்பரம்

மாமியாருக்கு முத்தமிட்டு வாழ்த்துக்களை கூறிய விக்னேஷ் சிவன்.. தீயாய் பரவும் புகைப்படம்..! 5

அதில் அவர், இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அன்புள்ள ஓமணகுரியன், நீங்கள் எனக்கு மற்றொரு தாய், நான் மிகவும் நேசிக்கும் ஒரு பெண் நீங்கள். எப்போதும் தூய்மையான ஆன்மாவை அழகான இதயத்துடன் எதிர்பார்க்கிறேன். உங்கள் நல்ல ஆரோக்கியம், அமைதி, மகிழ்ச்சி மற்றும் நிறைய ஆசீர்வாதங்களுக்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன்!! என்று பதிவிட்டுள்ளார்.

விளம்பரம்
தொடர்புடையவை  கெளதம் கார்த்திக்கின் தெறி நடிப்பில் உருவாகி இருக்கும் 1947 படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வீடியோ இதோ.!

மாமியாருக்கு முத்தமிட்டு வாழ்த்துக்களை கூறிய விக்னேஷ் சிவன்.. தீயாய் பரவும் புகைப்படம்..! 7

விளம்பரம்

Leave a Comment