தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள நானே வருவேன் படத்தின் டீசர் தற்போது வெளியாகி இருக்கிறது. தனுஷின் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள படம் தான் “நானே வருவேன்”. இந்த படத்தில் தனுஷ், எல்லி மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படம் இந்த மாதம் இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொன்னியின் செல்வன் படம் செப்டம்பர் 30-ம் தேதி வெளியாவதால், அதற்கு ஒரு நாள் முன்னதாக செப்டம்பர் 29ஆம் தேதி இந்த படம் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் இருந்து “வீரா சூரா” என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த நிலையில் தற்போது டீசர் வெளியாகி இருக்கிறது. கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

தமிழ் திரையுலகில் அசைக்க முடியாத இடத்தில் இருப்பவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் திருச்சிற்றம்பலம். இந்த படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. படத்தின் வசூல் நூறு கோடியை தாண்டி உள்ளது என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அடுத்ததாக தனுஷ் வாத்தி, நானே வருவேன் போன்ற பல படங்களில் கமிட்டாகி இருந்தார். இதில் நானே வருவேன் படம் தனது சொந்த அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் அவர் நடித்த முடித்திருக்கிறார். இந்த படத்தை அல்லு அர்ஜுனின் அப்பாவான அல்லு அரவிந்தின் சொந்த நிறுவனமான கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் மூலம் வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாக உள்ளது. தெலுங்கில் “நேனே வஸ்துன்னா” என்கிற பெயரில் இந்த படம் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்திருக்கிறார்.

காதல் கொண்டேன், துள்ளுவதோ இளமை, புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற வெற்றி படங்களுக்கு பின்னர் நீண்ட நாட்களுக்குப் பிறகு செல்வராகவனுடன் தனுஷ் இணைந்துள்ளதால் இந்த படத்தில் காண எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. சுமார் 11 ஆண்டுகளுக்குப் பிறகு இவர்கள் இருவரும் இணைந்துள்ளனர். தற்போது படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. நீங்களும் அந்த டீசரை காண..Watch the below video..
Youtube Video Code Embed Credits: Sun TV