ஜிபி முத்துவை டிடிஎப் வாசன் தற்போது தனது பைக்கில் அழைத்துச் சென்று உள்ள வீடியோ மிக வைரலாகி இருக்கிறது. தூத்துக்குடி உடன்குடியைச் சேர்ந்தவர் ஜிபி முத்து. இவர் ஆரம்பத்தில் டிக் டாக்கில் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். அப்போது இவரை திட்டி வரும் கமெண்ட்களுக்கு பதில் அளிக்கும் விதமாக செத்த பயலே, நார பயலே என்று பேசி பலருக்கு சிரிப்பை வர வைத்தார். இதன் பின்னர் இவர் மிகப் பிரபலமானார் டிக் டாக் செயலியை இந்திய அரசாங்கம் முடக்கிய பிறகு youtube பக்கத்தில் சேனலை தொடங்கி அதில் வீடியோக்களை பதிவேற்றி வருகிறார். இவருக்கு இவரது ரசிகர்கள் தொடர்ந்து லெட்டர் எழுதி வருகின்றனர். அந்த லெட்டரை படித்து அதை வீடியோவாக வெளியிட்டு வருகிறார். மிக காமெடியாக இருக்கும் அந்த வீடியோவை லட்சக்கணக்கான மக்கள் பார்த்து ரசித்து வருகின்றனர். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

அதே போல் யூட்யூபில் மற்றொரு பிரபலமாக இருப்பவர் டிடிஎஃப் வாசன். இவர் பைக்கிலேயே பல சாகசங்கள் செய்து வந்தார். பைக்கில் இருநூறு கிலோ மீட்டர் வேகத்தில் சென்று வீடியோ போடுவது, மேலும் செல்லும் வழியில் இருக்கும் ஏழைகளுக்கு உதவுவது என்று பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறார் டிடிஎஃப் வாசன். இவர் சமீபத்தில் லடாக் செல்லும் வழியில் சென்னைக்கு வந்த போது இவரை காண வந்த கூட்டத்தை பார்த்த போலீசாரே ஒரு நிமிடம் அசந்து போய்விட்டனர். கட்டுக்கடங்காத கூட்டத்தால் வாசனை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர் போலீசார். சமீபகாலமாக வாசனை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்து வந்தன. 200 கிலோமீட்டர் வேகம் என்பது இந்தியாவில் தடை செய்யப்பட்ட வேகம். பைக்கில் இவ்வளவு வேகத்தில் செல்லக்கூடாது என்று வாசனை கைது செய்ய வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில் ஜிபி முத்துவை டிடிஎஃப் வாசன் தனது பைக்கில் அமர வைத்து கொண்டு அதிவேகத்தில் சென்றிருக்கிறார். வேகம் தாங்காமல் பயத்தில் ஜிபி முத்து ஐயோ அம்மா என்று கதறுகிறார். பார்க்கவே காமெடியாக இருக்கும் அந்த வீடியோவை நீங்களும் காண. கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.. Watch the below video..
Youtube Video Code Embed Credits: Twin Throttlers