படத்தில் இருந்து முதல் ப்ரோமோ வெளியானது.! வந்தியத்தேவன் காட்சிகளை முதல் ப்ரோமோவாக வெளியிட்டது படக்குழு

பொன்னியின் செல்வன் கதையில் வரும் கதாநாயகனான வந்தியதேவன் குறித்த ப்ரோமோ ஒன்றை படக்குழு தற்போது வெளியிட்டு இருக்கிறது. சோழர்களின் வரலாறை குறித்து எழுதப்பட்ட நாவல்தான் பொன்னியின் செல்வன். இதில் வந்திய தேவன் என்பவன் வாணர் குலத்தில் பிறந்த வீரனாக இருப்பான். பின்னர் இவர்கள் அரசை இழந்த பிறகு சோழர்களுக்கு ஒற்றனாக செயல்படுவர். வந்திய தேவன் சோழ அரசர்களுக்கிடையே தூது செல்லவும், எதிரிகளிடமிருந்து ஒற்று அறியும் வேலையும் பார்க்கும் முக்கிய கதாபாத்திரமாக இருப்பான் முதலில் அவன் தஞ்சைக்கு வருவதற்கே வருவதற்கு காரணமே காஞ்சிபுரத்தில் இருக்கும் ஆதித்த கரிகாலரிடமிருந்து ஒரு ஓலையை கொண்டு வந்து தஞ்சாவூரில் இருக்கும் பேரரசர் சுந்தர சோழரிடம் சமர்ப்பிப்பதற்காகவே வருவான்.

படத்தில் இருந்து முதல் ப்ரோமோ வெளியானது.! வந்தியத்தேவன் காட்சிகளை முதல் ப்ரோமோவாக வெளியிட்டது படக்குழு 1
மேலும் ஆதித்த கரிகாலரின் தங்கையான குந்தவைக்கும் அவன் ஒரு வேலையை கொண்டு வருவான். அப்போது வந்தியத்தேவன் சந்திக்கும் துன்பங்கள் என்ன? அவன் எவ்வளவு இடர்பாடுகளை சந்தித்து தஞ்சாவூர் அரண்மனைக்குள் நுழைகிறான். பின்னர் அவன் பேரரசர் சுந்தர சோழரை சந்தித்தானா? அவரிடம் ஓலையை கொடுத்தானா? பிறகு குந்தவையை சந்தித்தானா? அவரிடமும் ஆதித்த கரிகாலரின் ஓலையை கொடுத்தானா? இல்லையா? என்பது குறித்து பொன்னியின் செல்வன் நாவலின் முதல் பாகம் அமைந்திருக்கும். தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் வந்தியத்தேவன் சுந்தர சோழரை சந்தித்து இந்த சோழ ஆட்சிக்கு ஆபத்து என்று கூறும் ப்ரோமோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறது படக்குழு.

விளம்பரம்
தொடர்புடையவை  "தண்ணீர் பாட்டில் முதல் டிரஸ் கோட் வரை"!! அசத்தலாகவும், ஆடம்பரமாகவும் நடைபெறும் விக்னேஷ் நயன்தாராவின் மெஹெந்தி ஃபங்க்ஷன்!!!

படத்தில் இருந்து முதல் ப்ரோமோ வெளியானது.! வந்தியத்தேவன் காட்சிகளை முதல் ப்ரோமோவாக வெளியிட்டது படக்குழு 3

பொன்னியின் செல்வன் நாவலின் மிக முக்கியமான கதாபாத்திரமும், ஹீரோவும் வந்திய தேவன்தான். அவனுக்காக ஒரு ப்ரோமோவை படக்குழு வெளியிட்டு இருக்கிறது. இதில் வந்தியத்தேவன் படும் கஷ்டங்களையும், அவன் யாரிடம் எல்லாம் அடிபட்டு மிதிபட்டு ஓலையை அரசரிடம் சேர்க்கிறார் என்பது பற்றியும், இந்த ப்ரோமோவில் தெளிவாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. நீங்களும் அந்த ப்ரோமோவை காண.. Watch the below video..

விளம்பரம்

YouTube Video Code Embed Credits: Cinema Vikatan

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment