இந்தியன் 2 படத்துக்காக மிக கடுமையாக உழைக்கும் காஜல் அகர்வால்.!

இந்தியன் 2 படத்திற்காக காஜல் அகர்வால் களரி பயிற்சியும், உடல் எடை குறைப்பிலும் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமலஹாசனின் இரட்டை வேடத்தில் வெளியாகியிருந்த படம் தான் இந்தியன் 2. இது ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தது. 25 வருடங்களுக்குப் பிறகு கமலஹாசன் நடிப்பில் மீண்டும் இந்தியன் 2 திரைப்படத்தின் பணிகள் தொடங்கின. கடந்த 2017 ஆம் ஆண்டு இந்தியன் 2 படப்பிடிப்புகள் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த கிரேன் விபத்து காரணமாக மூன்று பேர் பலியானார்கள். இதனால் இந்த படம் கிடப்பில் போடப்பட்டது. பின்னர் இந்த படம் குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகாமலே இருந்து வந்தது. கமலஹாசனும் பிக்பாஸ், விக்ரம் என்று தனது வேலைகளில் தீவிரமாகினார். ஷங்கரும் தெலுங்கு பக்கம் தனது கவனத்தை திருப்பி இருந்தார். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

இந்தியன் 2 படத்துக்காக மிக கடுமையாக உழைக்கும் காஜல் அகர்வால்.! 1

விளம்பரம்

கமலஹாசனும் விக்ரம் படப்பிடிப்பில் தீவிரமாக ஈடுபட்டார். மேலும் பிக்பாஸிலும் அவர் கவனம் செலுத்தி வந்தார். இந்தியன் 2 குறித்த செய்திகள் அவ்வப்போது வெளியாகி வந்தது. தற்போது விக்ரம் படம் கொடுத்த வெற்றியால் கமலஹாசன் ஏகத்துக்கும் குஷியில் இருக்கிறார். இதனால் அவர் மீண்டும் இந்தியன் 2வை கையில் எடுத்திருக்கிறார். லைகா ப்ரொடக்‌ஷன்சும் உதயநிதி ஸ்டாலினும் இணைந்து இந்த படத்தை தயாரிப்பதாக முன்வந்துள்ளனர். இந்த நிலையில் கமலஹாசன் தனது twitter பக்கத்தில் இயக்குனர் சங்கரை செட்டில் வைத்து சந்திக்கும் புகைப்படங்களையும் வீடியோவையும் ஷேர் செய்து இந்தியன் 2 துவங்குகிறது என்று பதிவிட்டு இருந்தார். முறுக்கு மீசையுடன் கமலஹாசனும், கதாநாயகியாக காஜலும் இந்தியன் 2 படத்தில் நடிக்க ரெடியாகிவிட்டனர்.

தொடர்புடையவை  பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாவது சிங்கிள் "வீரா ராஜா வீரா" வெளியானது.!

இந்தியன் 2 படத்துக்காக மிக கடுமையாக உழைக்கும் காஜல் அகர்வால்.! 3

விளம்பரம்

படத்தில் சில ஃபிளாஷ்பேக் காட்சிகள் நடைபெற இருக்கிறது. இதற்காக காஜல் அகர்வால் மிகுந்த சிரமப்பட்டு களரி பயிற்சி கற்று வருகிறார். மேலும் தனது உடல் எடை குறைப்பிற்காக அவர் மிகவும் தீவிரமாக இருந்து வருகிறார்.
சமீபத்தில் கூட அவர் குதிரையில் அமர்ந்து பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார். தற்போது அடுத்தடுத்த முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். அந்த வீடியோக்களை தம்மது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார் காஜல் அகர்வால். அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி இருக்கிறது.

விளம்பரம்
விளம்பரம்

Leave a Comment