சரவணா ஸ்டோர்ஸ் கடை உரிமையாளரான அண்ணாச்சி தற்போது விதவிதமாக போட்டோ ஷூட்டுகளை நடத்தி, அதை தனது சோசியல் மீடியா பக்கங்களில் பதிவேற்றி வருகிறார். ஆரம்பத்தில் ஹன்சிகா தமன்னாவுடன் தனது கடை விளம்பரங்களில் நடித்து வந்தார் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள் சரவணன். அப்போது அவரை பலரும் கடுமையாக உருவ கேலி செய்தனர். ஆனால் எதையும் கண்டு கொள்ளாமல் அண்ணாச்சி தொடர்ந்து விளம்பரங்களில் நடித்து வந்தார். பின்னர் அவருக்கு படங்களின் நடிக்கும் ஆசை வந்தது. எனவே தனது கடை பெயரிலேயே சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன் என்ற நிறுவனத்தை உருவாக்கினார். அந்த நிறுவனத்தின் மூலமாக தி லெஜெண்ட் என்கிற படத்தை எடுத்தார். படமும் பெரிய அளவில் வெற்றி பெற்றது.

தனது முதல் படத்திலேயே முன்னணி நடிகர்களுக்கு இணையாக வசூலை குவித்து இருந்தார் அண்ணாச்சி. தொடர்ந்து படங்களில் நடிக்கவும் ஆர்வம் காட்டி வருகிறார். அதற்காக அனுபவமுள்ள இயக்குனர்களையும் அவர் தேடி வருகிறார். ஒருமுறை செய்தியாளழ் சந்திப்பின்போது நீங்கள் அடுத்தடுத்த படம் நடிப்பீர்களா என்று கேட்டபோது, நல்ல கதை அம்சத்துடன் கூடிய படம் கிடைத்தால் நடிப்பேன் என்று கூறியிருந்தார். எனவே அண்ணாச்சி அடுத்த அடுத்த படங்களில் நடிக்க ஆரம்பிக்க இருப்பதாகவே தெரிகிறது. இந்த நிலையில் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் அண்ணாச்சி அவ்வப்போது தனது ட்ரெண்டிங் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் தளபதி விஜய் உடன் ராஸ்மிகா மந்தனா வெளியிட்ட புகைப்படத்தைப் போன்றே ஹேர் ஸ்டைலை வைத்துக் கொண்டு அண்ணாச்சியும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்.

பிறகு வெந்து தணிந்தது காடு படத்திற்காக சிம்பு உடல் எடையை குறைத்து இருந்தது போலவே, இவரும் உடல் எடையை வெகுவாக குறைத்து சிம்புவுக்கு போட்டியாக ஒரு புகைப்படத்தை பதிவேற்றி இருந்தார். இந்த நிலையில் இன்று ஒரு புகைப்படத்தை சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார் மஞ்சள் நிற டி-ஷர்ட் மற்றும் ஜீன்ஸ் பேண்ட் அணிந்து அவர் போஸ் கொடுத்துள்ளார். ட்ரோல்ஸ்கள் மீம்ஸ்கள் குறித்து கவலைப்படாத அண்ணாச்சி, தொடர்ந்து புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார். இதிலிருந்து அண்ணாச்சி அடுத்த படத்திற்கு ரெடியாகிவிட்டார் என்று தெரிகிறது.
