மாலுக்கு சென்று விளையாடிய ஐலா.! இந்த குழந்தை சிரிக்கும் போது கவலை எல்லாம் மறந்துடுது.!

பொதுவாக குழந்தைகள் என்றாலே அனைவர் மனதிற்கும் ஒரு இன்பமான விஷயம்தான். குழந்தைகளை பார்த்தாலே நம் கவலைகள் அனைத்தும் மறந்துவிடும். அதிலும் குறிப்பாக நாம் தினமும் பார்த்து ரசிக்கும் நடிகர் நடிகர்களின் குழந்தைகள் என்றால் சொல்லவே தேவையில்லை. அப்படிப்பட்ட ஒரு குறும்புகள் நிறைந்த குழந்தை தான் ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் தம்பதிகளின் குழந்தை. அந்த குழந்தையின் பெயர் ஐலா சையத். சின்னத்திரையில் ராஜா ராணி என்ற தொடரின் மூலமாக நடிகர்களாக அறிமுகமானவர்கள் ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் கார்த்திக். இவர்கள் இருவருக்குமே இது முதல் நாடகம். இதற்கு முன்பாக ஆல்யா மானசா மாநாட மயிலாட போன்ற சில நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

மாலுக்கு சென்று விளையாடிய ஐலா.! இந்த குழந்தை சிரிக்கும் போது கவலை எல்லாம் மறந்துடுது.! 1

விளம்பரம்

சஞ்சீவ் குளிர் 100 டிகிரி போன்ற சில படங்களில் நடித்துள்ளார். பின்னர் அவருக்கு திரைத்துறை பெரிதும் கை கொடுக்காததால், சின்னத்திரையில் நடிப்பதற்காக வந்தார். இருவரும் இணைந்து விஜய் டிவியில் ராஜா ராணியில் சிறப்பாக நடித்தனர். பின்னர் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணத்திற்கு அல்யாவின் குடும்பத்தில் சம்மதம் தெரிவிக்கவில்லை. எனவே பெற்றோரின் எதிர்ப்பை மீறி சஞ்சீவை திருமணம் செய்து கொண்டார் ஆல்யா. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். முதல் குழந்தை ஐலா, இரண்டாவது குழந்தை அர்ஷ்.இவர்கள் செய்யும் குறும்புத் தனங்களை தனது youtube பக்கத்தில் அவ்வப்போது பதிவேற்றி வருகிறார் சஞ்சீவ். அப்படி தற்போது ஒரு வீடியோவை பதிவேற்றி இருக்கிறார்.

தொடர்புடையவை  சிலரின் வேஷம் கலைந்து விட்டது.! தினேஷ், விஷ்ணுவை மறைமுகமாக சாடிய கமல்.? ப்ரோமோ இதோ

மாலுக்கு சென்று விளையாடிய ஐலா.! இந்த குழந்தை சிரிக்கும் போது கவலை எல்லாம் மறந்துடுது.! 3

விளம்பரம்

ஐலாவுக்கு பாஸ்போர்ட் எடுத்துவிட்டு மாலுக்கு சென்றுள்ளனர். ஆல்யா மற்றும் சஞ்சீவ் இருவரும் ஐலாவை விளையாட்டு பொருட்களில் ஏற்றி அமர வைத்துள்ளனர். ஐலாவும் கார் ஓட்டுவது, ட்ரெயின் ஒட்டுவது என்று மிக ஜாலியாக அந்த மாலை சுற்றி வருகிறார். அந்த வீடியோவை பார்த்தாலே மனதிற்கு நிம்மதியாக இருக்கிறது. மேலும் ஐலாவின் சிரிப்பும் அவளுடைய குறும்புத்தனமும் ரசிக்கும் படியாக இருக்கிறது. நீங்களும் அந்த வீடியோவை காண.. Watch the below video..

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Sanjiv & Alya

விளம்பரம்

Leave a Comment