தனுஷ் ஐஸ்வர்யா பிரிவு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது அதற்கு கோபமாக பதில் அளித்துவிட்டு கஸ்தூரிராஜா சென்றுள்ள சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 90களில் முன்னணி இயக்குனராக இருந்தவர் கஸ்தூரிராஜா. இவருக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் இயக்குனர் செல்வராகவன், இளைய மகன் நடிகர் தனுஷ். மூத்த மகன் செல்வராகவனுக்கும் சோனியா அகர்வாலுக்கும் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆகியிருந்தது. தற்போது செல்வராகவன் இரண்டாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார். இளைய மகன் தனுஷ், ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 18 ஆண்டுகளாக சமூகமாக சென்று கொண்டிருந்த அவர்களது வாழ்க்கையில் விரிசல் ஏற்பட்டது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு தானும் ஐஸ்வர்யாவும் பிரிந்து விட்டதாகவும் தனித்தனியாக வாழ்ந்து வருவதாகவும் தனுஷ் தனது சோசியல் மீடியா பக்கத்தில் அறிவித்து இருந்தார். இது தனுஷ் ரசிகர்கள் மட்டுமல்லாது ரஜினி ரசிகர்களிடையேயும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் தாங்கள் எதற்காக பிரிகிறோம் என்பது பற்றி அவர்கள் எந்த விதமான விளக்கத்தையும் அப்போது கொடுக்கவில்லை. மேலும் அதிகாரப்பூர்வமாக விவாகரத்தும் வாங்கவில்லை. இன்று வரை இரு தரப்பில் இருந்தும் விவாகரத்து குறித்து எந்த விதமான பேச்சுக்களும் எழவில்லை. ஜனவரி மாதம் தங்கள் இருவதும் பிரிவதாக அறிவித்த நிலையில், கடந்த மாதம் தனுஷும் ஐஸ்வர்யாவும் எட்டு மாதங்களுக்குப் பிறகு நேரில் சந்தித்துக் கொண்டிருந்தனர். அவர்களது மகன் லிங்காவின் பள்ளியில் ஒரு நிகழ்ச்சிக்காக வந்த அவர்கள் நேரில் சந்தித்துக் கொண்டனர்.

பின்னர் இருவரும் எங்கும் சந்தித்துக் கொள்ளவில்லை. விவாகரத்து குறித்தும் எந்தவிதமான கருத்தும் பேசவில்லை. இந்த நிலையில் தனுஷ், செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படத்தின் நடித்துக் கொண்டிருக்கிறார். படம் செப்டம்பர் 29ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இது குறித்து கஸ்தூரிராஜா செய்தியாளர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். இப்போது அவரிடம் தனுஷ் ஐஸ்வர்யா பிரிவு பற்றி கேட்கப்பட்டது. அப்போது கோபமடைந்த அவர், இதனால் தான் நான் செய்தியாளர்களை சந்திப்பதே இல்லை. அத்துமீறி கேள்வி கேட்காதீர்கள், அவர்கள் பற்றி பேச எனக்கு எதுவும் இல்லை என்று கோபமாக பதில் அளித்துவிட்டு அங்கிருந்து சென்றார்.அந்த வீடியோ தற்போது வரலாகி வருகிறது. நீங்களும் அந்த வீடியோவை காண.. Watch the below video..
YouTube Video Code Embed Credits: Cine MB