சுந்தர் சி இயக்கும் “காபி வித் காதல்” படத்தின் ட்ரைலர் வெளியானது. !

சுந்தர் சி இயக்கும் காபி வித் காதல் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது. சுந்தர் சி இயக்கி ஜீவா, ஜெய் ஆகியோர் நடிப்பில் உருவான படம் தான் கலகலப்பு 2. இந்த படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. அதன் பிறகு மீண்டும் இவர்கள் மூவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகினர். அந்தப் படம் தான் காபி வித் காதல். இதன் சூட்டிங் அனைத்தும் முடிந்து இறுதி கட்ட பணிகள் நடந்து வருகிறது. தற்போது இந்த படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது தொடர்ந்து படத்தின் டிரைலரை பட குழு வெளியிட்டு இருக்கிறது. கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

சுந்தர் சி இயக்கும் "காபி வித் காதல்" படத்தின் ட்ரைலர் வெளியானது. ! 1

விளம்பரம்

இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். மேலும் சுந்தர் சியின் மனைவி குஷ்புவின் அவனி சினி மேக்ஸ் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் போன்ற மூன்று ஹீரோக்களும், ஐஸ்வர்யா தத்தா, அமிர்தா ஐயர், ரைசா வில்சன் போன்ற மூன்று ஹீரோயின்களும் இருக்கின்றனர். மேலும் பிக்பாஸ் புகழ் சம்யுக்தா, மறைந்த பிரதாப் போத்தன், விஜய் டிவி தொகுப்பாளினி டிடி, யோகி பாபு, ரெட்டிங் கிங்ஸ்லி போன்ற பல முன்னணி நடிகர்கள் இந்த படத்தில் நடித்திருப்பதால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.

தொடர்புடையவை  எது பத்து ஹீரோயினா?!!பணம் பத்தும் செய்யும் என நிரூபித்த லெஜெண்ட் அண்ணாச்சி!!பத்து முன்ணனி நாயகிகளை கொண்டு ஆடியோ லான்ச் அண்ணாச்சி!!!

சுந்தர் சி இயக்கும் "காபி வித் காதல்" படத்தின் ட்ரைலர் வெளியானது. ! 3

விளம்பரம்

படத்திலிருந்து ஏற்கனவே ரம் பம் பம், தியாகி பாய்ஸ் என்ற இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றிருந்தது. இதில் தியாகி பாய்ஸ் பாடலை யுவன் சங்கருடன் இணைந்து ஹிப் ஹாப் ஆதி பாடி இருந்தார். பலருக்கும் இந்த பாடல் ஃபேவரைட் ஆக மாறி இருக்கிறது. பின்னர் நாளைய பொழுது என்ற சோக பாடலையும் யுவன் சங்கர் ராஜா வெளியிட்டிருந்தார். தற்போது படத்தின் டிரைலர் வெளியாகி இருக்கிறது நீங்களும் அந்த ட்ரைலரை காண.. Watch the below video..

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: U1 Records

விளம்பரம்

Leave a Comment