பிக்பாஸ் சீசன் 6ல் எதிர்பார்க்கப்படும் போட்டியாளர்கள்.! பரபரக்கும் பிக்பாஸ் உத்தேச பட்டியல் .!

பிக்பாஸ் சீசன் 6 விரைவில் ஆரம்பமாக இருக்கிறது. அக்டோபர் ஒன்பதாம் தேதி முதல் பிக்பாஸ் சீசன் 6 ஆரம்பிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமான ப்ரோமோவை வெளியிட்டு இருந்தது விஜய் டிவி. எப்பொழுதுமே பிக்பாஸ் ஆரம்பிப்பதற்கு முன்பாக இவர்கள்தான் போட்டியாளராக உள்ளே போகிறார்கள் என்ற ஒரு பட்டியல் இணையத்தில் வெளியாகுவது வழக்கமாக இருக்கிறது. அந்த வகையில் தற்போது ஒரு உத்தேச பட்டியல் வெளியாகி இருக்கிறது. அதில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

பிக்பாஸ் சீசன் 6ல் எதிர்பார்க்கப்படும் போட்டியாளர்கள்.! பரபரக்கும் பிக்பாஸ் உத்தேச பட்டியல் .! 1

விளம்பரம்

முதலாவதாக வனிதாவின் முன்னாள் காதலர் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் உள்ளே செல்ல இருப்பதாக தெரிகிறது. இவர் வனிதா பற்றி சில கருத்துக்களை கூறுவார், அதனால் கன்டென்ட் கிடைக்கும் என்று விஜய் டிவி கணக்கு போட்டு வருகிறது.

பிக்பாஸ் சீசன் 6ல் எதிர்பார்க்கப்படும் போட்டியாளர்கள்.! பரபரக்கும் பிக்பாஸ் உத்தேச பட்டியல் .! 3

விளம்பரம்

இரண்டாவது ரட்சிதா மகாலட்சுமியை உள்ளே அனுப்ப திட்டம் போட்டுள்ளது. அவர் ஏற்கனவே விஜய் டிவியிலிருந்து சீரியலில் நடித்துக் கொண்டிருந்தபோது விலகி இருந்தார். கலர்ஸ் டிவியில் நடித்துக் கொண்டிருந்த அவரின் சீரியல் தற்போது முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டதால், மீண்டும் அவரை விஜய் டிவியில் களம் இறக்க பிக்பாஸ் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

தொடர்புடையவை  புதிதாக வீடு கட்டி வரும் நீலிமா ராணி.! பூமி பூஜையுடன் தொடங்கிய பணிகள்.! நீலிமா வெளியிட்ட அழகிய புகைப்படங்கள்.!

பிக்பாஸ் சீசன் 6ல் எதிர்பார்க்கப்படும் போட்டியாளர்கள்.! பரபரக்கும் பிக்பாஸ் உத்தேச பட்டியல் .! 5

விளம்பரம்

 

மூன்றாவதாக விஜே அர்ச்சனாவை களம் இறக்க உள்ளதாக தெரிகிறது. அவர் சமீபத்தில் ராஜா ராணி சீரியல் இருந்து விலகினார். அப்போதே அவர் பிக்பாஸில் கலந்து கொள்வார் என்று தகவல் வெளியானது. அதேபோல் தற்போது அவர் பெயரும் அடிபடுகிறது.

விளம்பரம்

பிக்பாஸ் சீசன் 6ல் எதிர்பார்க்கப்படும் போட்டியாளர்கள்.! பரபரக்கும் பிக்பாஸ் உத்தேச பட்டியல் .! 7

அடுத்தபடியாக மதுரை முத்து கலந்து கொள்ள இருக்கிறார் என தெரிகிறது. இவருக்கு அசத்தப் போவது யாரு குக் வித் கோமாளிக்கு பிறகு சரியான ஒரு தளம் கிடைக்காமல் இருப்பதால், இவரையும் பிக்பாஸ் களம் இறக்க உள்ளதாக தெரிகிறது. ஜி பி முத்து கலந்து கொள்வார் என்று தகவல் பரவி வந்த நிலையில் மதுரை முத்துவே இந்த ரேசில் முந்துகிறார்.

விளம்பரம்

பிக்பாஸ் சீசன் 6ல் எதிர்பார்க்கப்படும் போட்டியாளர்கள்.! பரபரக்கும் பிக்பாஸ் உத்தேச பட்டியல் .! 9

அடுத்ததாக சுஜா வருணியின் கணவர் சிவக்குமார் கலந்துகொள்ள இருப்பதாக தெரிகிறது. சிவாஜியின் பேரனான இவருக்கும் படங்களின் நடிக்க சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை. கிடைத்த படங்களும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இவர் தற்போது பிக்பாஸ் ஜோடிகள் நடன நிகழ்ச்சியில் சுஜா வருணியுடன் பங்கெடுத்து வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. எனவே இவருக்கும் ஒரு வாய்ப்பு கிடைக்க பிக்பாஸ் திட்டம் போட்டு வருவதாக தெரிகிறது.

விளம்பரம்
தொடர்புடையவை  வீட்டில் குடில் வைத்து கிறிஸ்துமஸை கொண்டாடி இருக்கும் சுந்தரி சீரியல் நடிகை கேபிரியல்லா.!

பிக்பாஸ் சீசன் 6ல் எதிர்பார்க்கப்படும் போட்டியாளர்கள்.! பரபரக்கும் பிக்பாஸ் உத்தேச பட்டியல் .! 11

அடுத்ததாக விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை ரக்சன் உடன் தொகுத்து வழங்கி வந்த ஜாக்குலினை உள்ளே அனுப்ப உள்ளதாக தெரிகிறது. ஜாக்குலின் விஜய் டிவியில் ஒளிபரப்பான தேன்மொழி பி ஏ என்ற நாடகத்தில் நடித்திருந்தார்.

விளம்பரம்

பிக்பாஸ் சீசன் 6ல் எதிர்பார்க்கப்படும் போட்டியாளர்கள்.! பரபரக்கும் பிக்பாஸ் உத்தேச பட்டியல் .! 13

அடுத்தது யாரும் எதிர்பார்க்காத வகையில் தீபா சங்கர் உள்ளே செல்ல இருப்பதாக தெரிகிறது. மெட்டி ஒலி நாடகத்தில் துணை வேடத்தில் நடித்து பிரபலமானவர் தீபா சங்கர். பின்னர் சன் டிவியில் பல்வேறு நாடகங்களில் நடித்து வந்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பான குஷி என்ற நாடகம் ஹீரோவுக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். குக் வித் கோமாளி மூலமாக பிரபலமானார். எனவே இவரும் ஒரு போட்டியாளராக இருக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு உள்ளே சென்றால் சிரிப்புக்கு பஞ்சம் இருக்காது.

விளம்பரம்

பிக்பாஸ் சீசன் 6ல் எதிர்பார்க்கப்படும் போட்டியாளர்கள்.! பரபரக்கும் பிக்பாஸ் உத்தேச பட்டியல் .! 15

அடுத்தபடியாக சர்ச்சைக்கு பெயர் போன சின்னத்திரை நடிகை ஸ்ரீநிதி பெயரும் அடிபட்டு வருகிறது. இருவரும் அதிகபட்சம் உள்ளே செல்லலாம் என்று தெரிகிறது.

விளம்பரம்

பிக்பாஸ் சீசன் 6ல் எதிர்பார்க்கப்படும் போட்டியாளர்கள்.! பரபரக்கும் பிக்பாஸ் உத்தேச பட்டியல் .! 17

இவர்களுடன் சேர்ந்து தர்ஷா குப்தா, விஜே மகேஸ்வரி, அந்தோணி தாசன், மைனா நந்தினி, கூல் சுரேஷ், நடிகை விசித்ரா அங்காடித் தெருவில் ஹீரோவாக நடித்த மகேஷ், பாய்ஸ் படத்தில் நடித்த மணிகண்டன், துள்ளுவதோ இளமை படத்தில் ஹீரோவாக நடித்த அபிநய், விஜய் டிவியில் டான்ஸ் மாஸ்டராக இருந்து வரும் மணிகண்டன், வாணி ராணி சீரியலில் நடித்த விக்னேஷ் ஆகியோரின் பெயர்களும் அடிபட்டு வருகிறது. இது எதுவுமே அதிகாரப்பூர்வ தகவல் இல்லை. இணையத்தில் உலா வரும் உத்சே பட்டியல்தான். விரைவில் சீசன் 6ல் யார் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்ற அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விளம்பரம்

Leave a Comment