விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் மௌன ராகம் என்ற தொடரில் சக்தி கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருப்பவர் ரவீனா தாஹா தனது youtube சேனலில் வீடியோ ஒன்றை பகிர்ந்து இருக்கிறார் அதில் கேரளாவில் காட்டுக்குள் செல்லும் அவர் பசி தாங்காமல் கஷ்டப்படுகிறார். அப்போது காட்டுக்குள் ஒரு கடையில் நல்ல அசைவ உணவு கிடைக்கிறது. அங்கு உணவை ஒரு பிடி பிடிக்கிறார். அந்த வீடியோவைத்தான் தற்போது பகிர்ந்து இருக்கிறார் ரவீணா. மௌன ராகம் சீரியலில் சக்தியாக நடித்துக் கொண்டிருப்பவர் ரவீணா. சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் 2014ம் ஆண்டு வெளியான ஜில்லா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பின்னர் 2016ம் ஆண்டு வெளியான்கதை சொல்ல போறோம் என்ற படத்தில் நடித்தார். பிறகு ஜீ தமிழில் ஒளிபரப்பான டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியலும் பங்கெடுத்தார்.

பின்னர் சினிமாவில் வாய்ப்புகள் குறையவே சீரியல் பக்கம் தலைக்காட்டத் தொடங்கினார். பிறகு ஜீ தமிழில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா என்ற சீரியலில் சில காலம் நடித்தார். அவருக்கு திருப்புமுனையாக அமைந்த நாடகம் என்றால் அது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மௌன ராகம் தான். இந்த சீரியலில் அவர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். யூட்யூபில் சேனல் ஒன்றை வைத்துள்ளார். அடிக்கடி வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். மேலும் சோசியல் மீடியாக்களில் மிக ஆக்டிவாக இருக்கும் அவர், அப்போது நடனமாடியும், ரிலீஸ் வீடியோக்கள் செய்தும், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் ஒரு வீடியோவை யூடியூபில் பகிர்ந்து இருக்கிறார்.

மௌனராகம் சீரியலின் பெரும்பாலான காட்சிகள் கேரளாவில் தான் எடுக்கப்படுகிறது. எனவே அவர் கேரளாவுக்கு அடிக்கடி சென்று வருகிறார். அப்போது ஒரு அணையைப் பார்வையிட சென்ற அவருக்கு காட்டுக்குள் எந்த கடையும் இல்லாமல் இருந்தபோது கடுமையாக பசி ஏற்பட்டது. அப்போது ஒரு கடை தென்பட்டது. அங்கு சென்று அவர் அசைவ உணவுகளை அடித்து நொறுக்கி இருக்கிறார். அதை வீடியோவாக பதிவிட்டு இருக்கிறார். நீங்களும் அந்த வீடியோவை காண.. Watch the below video..
Youtube Video Code Embed Credits: Raveena Daha