படம் ரொம்ப அருமையா இருக்கு.. நானே வருவேன் படத்தை புகழ்ந்து தள்ளிய ப்ளூ சட்டை மாறன்

நானே வருவேன் திரைப்படம் குறித்த தனது விமர்சனங்களை ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் செய்துள்ளார். செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் தான் நானே வருவேன். இந்த படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது இந்த படம் குறித்து தற்போது விமர்சனங்களை பார்க்கலாம். படத்தின் ஒன்லைன் குறித்து பார்க்கும் பொழுது தனுஷ் இரட்டைப் பிறவியாவார். இதில் ஒருவர் வில்லனாகவும், மற்றொருவர் ஹீரோவாகவும் இருக்கிறார். சிறுவயதிலேயே இவர்கள் இருவரும் பிரிந்து விடுகின்றனர். பின்னர் ஓர் அமானுஷ்ய சக்தியால் இவர்கள் இருவருக்கும் என்ன நடக்கிறது என்பதே படத்தின் மீது கதை. கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

படம் ரொம்ப அருமையா இருக்கு.. நானே வருவேன் படத்தை புகழ்ந்து தள்ளிய ப்ளூ சட்டை மாறன் 1

விளம்பரம்

இரட்டையர்கள் ஆக வரும் தனுஷின் பெயர்கள் கதிர் மற்றும் பிரபு. இதில் கதிர் தான் முரடன். பிரபு ஹீரோ. ஒரு கட்டத்தில் கதிர் அவரது அப்பாவையே கொன்று விடுகிறார். இதனால் கதிரை விட்டு விட்டு, பிரபுவுடன் அவரது அம்மா தனியாக சென்று விடுகிறார். பின்னர் பிரபு வளர்ந்து இந்துஜாவை திருமணம் செய்து கொள்கிறார். இவர்களுக்கு ஒரு மகள் பிறக்கிறது. மகள் வளர்ந்த பின்பு திடீரென அவரிடம் சிறிது மாற்றம் காணப்படுகிறது. தனியாக பேசிக் கொண்டிருக்கிறார். இதனால் பிரபு மன வேதனை அடைகிறார். பின்னர் தன் மகள் மீது ஆவி இருப்பதை அவர் கண்டுபிடிக்கிறார். அப்போது அந்த ஆவி பிரபுவிடம் சில கோரிக்கைகளை வைக்கிறது. அதை செய்தால் தான் உனது மகளை விட்டுப் போவேன் என்றும் அந்த ஆவி கூறுகிறது. அந்த ஆவி சொன்னதை தனுஷ் செய்தாரா? ஆவியிடம் இருந்து தன் மகளை மீட்டாரா? என்பது தான் படத்தின் மீதி கதை.

தொடர்புடையவை  பரத், வாணி போஜன் நடிப்பில் குலை நடுங்க வைக்கும் "மிரள்" படத்தின் ட்ரைலர்.!

படம் ரொம்ப அருமையா இருக்கு.. நானே வருவேன் படத்தை புகழ்ந்து தள்ளிய ப்ளூ சட்டை மாறன் 3

விளம்பரம்

இந்த படம் குறித்த தனது விமர்சனங்களை ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் செய்துள்ளார். அவர் கூறும் போது படம் மிக நன்றாக வந்துள்ளதாக கூறினார். லாஜிக் தவறுகளை விட்டுவிட்டு படம் பார்த்தால் ஒரே நேரத்தில் சைக்கோ மற்றும் திரில்லர் படங்களை பார்த்த அனுபவம் கிடைக்கும் என்று கூறினார். அவரின் முழு விமர்சனங்களை நீங்களும் காண.. Watch the below video..

விளம்பரம்

Youtube Video Code Embed Credits: Tamil Talkies

விளம்பரம்

Leave a Comment